Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நெமிலி வட்டாரம் (கிளை), ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்.

 அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம்.
நமது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 3 வருவாய் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வருவாய் மாவட்டங்களில், சில வட்டாரங்களும் பிரிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் நமது வட்டாரத்தில் இருந்து களத்தூர், பெரும்புலிபாக்கம்,  அவளூர் மற்றும் சங்கரன்பாடி முதலான ஊராட்சிகள் காவேரிப்பாக்கம் வட்டாரத்திற்கும், மேல்பாக்கம் ஊராட்சி அரக்கோணம் வட்டாரத்திற்கும் செல்கிறது. இந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து ஊதியம் அந்தந்த வட்டாரத்தில் வழங்கப்படும் எனவும், இவர்களின் பணிப்பதிவேடுகள் இந்த மாத இறுதிக்குள் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பள்ளிகளை சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட தாய் வட்டார அலுவலகத்தில் விருப்ப கடிதம் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இப் பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்கள் இணைத்து ஓர் கூட்டத்தினை கூட்ட இருக்கிறார்கள்.

ஆனால், இது சம்பந்தமாக இயக்குனர் இதுவரை எந்தவிதமான செயல்முறைகளையும் வெளியிடவில்லை. மேலும் அவ் வடடாரங்களுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப் பட்டியலில் இழப்பு ஏதும் இல்லாத வகையில் உரிய இடத்தில் இவர்களை இணைத்திட வேண்டும். அதுமட்டுமின்றி எந்த வட்டாரத்திலும் இல்லாத நிகழ்வாக நமது வட்டாரத்தில் மேல்பாக்கம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் பணிநிறைவு காரணமாக காலிப் பணியிடமாக உள்ளது. இப் பணியிடத்தினை நிரப்பி ஒப்படைக்க வேண்டும் என்பவையே நமது கோரிக்கை ஆகும்.

இது குறித்து நமது மாவட்ட அமைப்பு, மாநில மையத்திடம் கோரிக்கை வைத்து உள்ளது. மாநில மையம் இயக்குனரிடம் பேசி இவை அனைத்திற்கும் ஓர் தெளிவான தீர்வு கிடைக்கும் வகையில் செயல் முறைகள் வெளியிட நெருக்குதல் கொடுக்க வேண்டும் என மாவட்ட மையம் கேட்டுக் கொண்டு உள்ளது.

தேர்வு நிலை/சிறப்பு நிலை மற்றும் பணிவரன்முறை கோரும் ஆசிரியர்கள் “உண்மைத்தன்மை சான்று” இல்லாமலேயே  மனு சமர்பிக்கலாம். தங்கள் மனு பரிசீலிக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளை (17.08.20) முதல் 1 முதல் 5/8 மாணவர் சேர்க்கையும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணியினை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து இப் பணியினை மிகச் சிறப்பாக மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவனின் பள்ளி வேலை நாட்கள் - 23.03.20 நாள் முடிய கணக்கிடவும்.

மாணவன் பள்ளியை விட்டு விலகிய நாள்: 24.03.20.

மதிப்பெண் பதிவேட்டில், CCE பதிவேடுகளில் , வகுப்பாசிரியர்கள் பதிவேட்டில் உள்ள Formative (a) க்கு 20 மதிப்பெண்கள், Formative (b)க்கு 20 மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்யவும். Summative தேர்வு நடத்தாததால்  அந்தக் கலங்களில் (கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள் - அனைத்து மாணவர்களும் தேர்ச்சி)  என எழுதவும் 


குறிப்பு :கலத்தில் ஒவ்வொரு மாணவர் பெயருக்கு நேராக “தேர்ச்சி” என எழுதவும்.

தேர்வு விதி:
தமிழக அரசு அறிவிப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஒழுங்குமுறைகள் 2019 - 2020 கல்வியாண்டில் தொடர்ந்து பயின்றுவந்த 1முதல் 5/8 -ஆம் வகுப்புவரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது  என எழுதுமாறு அனைத்துவகைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
இவண்:
N. சான்பாஷா
தலைவர்.

A. ஆனந்த செல்வக்குமார்
செயலாளர்.

M. புருஷோத்துமன்
பொருளாளர்.

S. மணிவண்ணன்,
மாவட்டத் துணைச் செயலாளர்.

S. R. சிவராஜ்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்கள்.

‎TNPTF - என்பதில் பெருமை கொள்வோம்.

Post a Comment

Previous Post Next Post