Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையின் ( New admissions ) போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகள் :

1. தொடக்கப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கும் நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ்கள் ( TC - Transfer Certificate ) வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் எடுக்கப்பட்டு மாற்றுச் சான்றிதழ்கள் ( TC - Transfer Certificate ) முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு , தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நாளை ஒதுக்கீடு செய்து சமூக இடைவெளியை பின்பற்றி மாற்றுச் சான்றிதழ்கள் ( TC - Transfer Certificate ) வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும்.

3. தொடக்க / நடுநிலை பள்ளிகளில் 5 - ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 6 - ஆம் வகுப்பிலும் , 8 - ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 9 - ஆம் வகுப்பிலும் நடுநிலை , உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறவேண்டும் . இதற்காக இப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் , மாணவர்கள் சேர உள்ள ஊட்டுப் ( Feeder school ) பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

4. அப்பள்ளிகளில் 5 / 8 ஆம் வகுப்புகள் பயின்ற மாணவர்களின் பட்டியல் TNEMIS இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும் அல்லது ஊட்டுப்பள்ளி ( Feeder school ) தலைமையாசிரியரிடம் இருந்து பட்டியல் பெற்றுக் கொள்ள வேண்டும்.

5. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது ஊட்டுப் பள்ளிகளில் ( Feeder School ) ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களின் பெற்றோர்களது கைபேசி / தொலைபேசி எண்கள் மற்றும் வீட்டு முகவரி ஆகியவற்றை தொடக்க / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து சேகரித்துக் கொள்ள வேண்டும்.

6. அவ்வாறு பெற்ற கைபேசி / தொலைபேசி எண்கள் மற்றும் வீட்டு முகவரிகளில் உள்ள பெற்றோர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அம்மாணவர்களைப் தமது பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நாட்களில் ஆறாம் / ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு தலைமை ஆசிரியர்களால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் . இதனை ஊட்டுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாகவும் பெற்றோருக்கு தெரியப்படுத்தலாம் .

7. ஊட்டுப் பள்ளியில் அதிக மாணவர்கள் இருப்பின் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு காலையில் 20 மாணவர்கள் / பெற்றோர்கள் பிற்பகலில் 20 மாணவர்கள் / பெற்றோர்கள் என அழைத்து மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும்.

8. மாணவர் சேர்க்கை அதிகளவில் இருக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் நாட்களையும் ஒதுக்கீடு செய்து மாணவர் சேர்க்கையினை நடத்திடல் வேண்டும்.

9. மாணவர் சேர்க்கை செய்திட தங்கள் பள்ளியில் அனைத்து முன்னேற்பாடுகளையும் தலைமையாசிரியர்கள் உரிய வகுப்பாசிரியர்கள் கொண்டு செய்து முடிக்க வேண்டும் . பள்ளியில் சேர உரிய ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் இல்லையெனினும் சேர்க்கை செய்து பின்னர் அச்சான்றுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

10. மேலே வரிசை எண் : 1-9ல் உள்ள அனைத்து நெறிமுறைகளும் 11 ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கும் பொருத்தமான வகையில் பின்பற்றப்பட வேண்டும்.

11. தலைமையாசிரியர்கள் பெற்றோர்களிடம் இருந்து உரிய விண்ணப்பம் பெற்று உடன் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும் . 1 ஆம் வகுப்பில் சேர உள்ள மாணவர்கள் நேரில் வருகை புரியவில்லை என்றாலும் பெற்றோர்கள் தரும் ஆவணங்கள் அடிப்படையில் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும்.

12. 1 , 6 , 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் மற்றும் பிற வகுப்புகளில் பள்ளி மாறுதலில் வரும் மாணவர்களுக்கு புதிய மாணவர் சேர்க்கை செய்திட தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அறிவிப்பு பலகையில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் . அந்த குறிப்பிட்ட நாளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

13. மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே , பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரிந்து , பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய துாய்மைப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை முடித்து பள்ளி முறையாக செயல்படுவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

14. புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளிலேயே அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள் , புத்தகப்பை , சீருடைகள் மற்றும் ஏனைய கல்விசார் விலையில்லா பொருட்கள் அரசாணை ( நிலை ) எண் . 344 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ( DM - II ) துறை , நாள் 10.7.2020 ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி வழங்கப்பட வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post