Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் தோழமைகளே .

  • வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் - இப்பதிவை ஆசிரியர்களிடையே பகிர்வதைவிட பிறதொழில்புரியும் நண்பர்களிடையே பகிருங்கள்
  • ஆசிரியர்கள் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று யாரும் சொல்லவேயில்லையே. தயாராக இருக்கிறோம். உங்கள் கணிப்பை விட அரசாங்கம் சரியாகத்தான் கணக்கிடுகிறது.
  • ஒரு பள்ளிக்கூடம் என்பது குறைந்தபட்சம் 20 முதல் 100 வீடுகளை உள்ளடக்கியது. ஒரு பள்ளியில் சுமாராக 20 முதல் 150  மாணவர்கள் பயிலுகிறார்கள் எனக் கொண்டால், ஒரே ஒரு ஆசிரியருக்கோ அல்லது மாணவனுக்கு கொரானா தொற்று ஏற்படுமானால் அதன் பாதிப்பு அத்தனை வீடுகளையும் அல்லாமல் பக்கத்து ஊர்களையும் பதம் பார்க்க தோன்றும். இதனால் 100 பேருக்கு தொற்று ஏற்படுவதாக கணக்கிட்டால் குறைந்தபட்சம் 1 விருந்து 3 கோடி வரை செலவாகும். அது மட்டுமல்ல உயிர் இழப்புகள் பெரும் கவலையை உண்டாக்கும். 
  • ஒரு பள்ளியின் நிலையே இவ்வாறென்றால் மொத்த தமிழ் நாட்டின் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டால் ஏற்படும் பொருளாதார செலவு இலட்சம் கோடிக்கு மேல் நிற்கும். இதை கருத்தில் கொண்டு தான் அரசு இவ்வாறு முடிவெடுத்திருக்கிறது.
  • மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கணக்கெடுப்பு, தேர்தல் நாட்கள், தேர்தல் எண்ணும் பணி,  டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்த்தொற்று நாட்களில் எச்சரிக்கை விழிப்புணர்வு, அயோடின் உப்பு விழிப்புணர்வு, நீரில் ஃப்ளோரின் அளவெடுத்தல் இவ்வாறு பல வேலைகளை ஆசிரியர்கள் கல்வி கற்பித்தலோடு சேர்த்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.தூய்மை பணியாளர்கள், தனியார் ஒட்டுனர்கள், வியாபாரிகள் என பொது  மக்களுக்கு ஏன் ஆசிரியர்கள் மேல் வெறுப்பை கட்டவிழ்க்கிறீர்கள்.
  •  படிப்பதற்கு பணம், நேரம் முதலீடு செய்து கேளிக்கைகளை குறைத்து நோக்கத்தை நோக்கி படித்து தேர்ச்சியுற்று பின் போட்டித்தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுத்தான் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர். இதில் எதற்கு பொறாமை, போட்டி போடுங்கள் முன்னேறுங்கள் முடிந்தால் ஆசிரியர்களாக வாருங்கள்..பிறகு தெரியும்.. 
  • 10 வது படித்த ரியல் எஸ்டேட் அதிபர்களும், கல்வித் தந்தைகளும், அரசியல்வாதிகளும் கோடிகளில் புரளும் போது ஆயிரங்களில் வாழும் ஆசிரியர்களை நொந்து கொள்வதென்ன.கொரான ஆசிரியர்களின் உழைப்பை சமூகத்திற்கு வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. நேரடி ஆசிரியர் கல்வி முறை, ஆன் லைன் வகுப்பு முறையை விட சிறந்தது என்பதை பட்டவர்த்தமாக்கி உள்ளது. இது தான் எதார்த்த நிலை.புரிந்து கொள்ளுங்கள்.
 நன்கு படித்து, கடுமையாக உழைத்து, ஆசிரியராகவோ, அரசு அலுவலராகவோ வாருங்கள்.
இணைந்து_பணியாற்றுவோம்.
இப்பதிவை ஆசிரியர்களிடையே பகிர்வதைவிட  பிறதொழில்புரியும் நண்பர்களிடையே பகிருங்கள் .

Post a Comment

Previous Post Next Post