Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

TNTET Apply Online - ஆசிரியர் தகுதித் தேர்வு-2022-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில்  2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு  தாள் I மற்றும் தாள் II-க்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வின் பெயர்: ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET)

தகுதிகள்:

தாள்-I: இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பிளஸ் தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வியை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தாள்-II: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: குறைந்தபட்ச 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், எம்பிசி, பிசி பிரிவினர் ரூ.500, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்,

தேர்வுசெய்யப்படும் முறை: தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

 தேர்வு நடைபெறும் நாள்: தாள்-I ஜூன் 27 மற்றும் தாள் - II ஜூன் 28 ஆம் தேதி நடைபெறலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.04.2022

 மேலும் விவரங்கள் அறிய http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

Previous Post Next Post