Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

செப்டம்பர் -17 (தந்தை பெரியார் பிறந்த தினம் ) ஆண்டுதோறும் " சமூகநீதி நாள் " ஆக அனுசரித்து அரசாணை வெளியீடு ! 

உறுதிமொழி - தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் -17 ஆம் நாளை ஆண்டுதோறும் " சமூகநீதி நாள் " ஆக அனுசரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 17.09.2021 அன்று உறுதிமொழி அனுசரித்தல் தொடர்பாக . 

சட்டமன்ற விதி எண் .110 :

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் , தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசமி அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17 - ஆம் நாளை ஆண்டுதோறும் " சமூக நீதி நாள் ” ஆகக் கொண்டாடுவது என முடிவு செய்து சட்டமன்ற விதி எண் .110 - ன்கீழ் அறிவிப்பு செய்ததனை பார்வையில் காணும் அரசாணை இன்று அரசால் வெளியிடப்பட்டுள்ளது .

 

ஈ.வெ.ராமசமி பிறந்த நாள் - சமூக நீதி நாள் :

அதில் , “ சாதிய ஏற்றத் தாழ்வுகள் , தீண்டாமைக் கொடுமைகளை , மத வேறுபாடுகளை உதறித் தள்ளி , பெண்களைச் சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17 - ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி , அனைத்து அரசு அலுவலகங்களிலும் " சமூக நீதி நாள் ” உறுதி மொழியை எடுத்துக் கொள்ளும் விதமாக கீழ்க்கண்டவாறு உறுதி மொழியினை அனுசரிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே , பார்வை 1 - ல் தெரிவித்துள்ளவாறு வரும் 17.09.2021 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு " சமூக நீதி நாள் ” உறுதிமொழியினை , சமூக இடைவெளி பின்பற்றி , முககவசம் அணிந்து உரிய பாதுகாப்புடன் எடுக்குமாறும் , உறுதிமொழி நிறைவுற்ற பின்னர் , இது தொடர்பான அறிக்கையினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . இணைப்பு : உறுதிமொழி .

சமூக நீதி நாள் உறுதிமொழி 

சமூக நீதி நாள் உறுதிமொழி வரிகள் :

" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - 
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
 எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன் !

 சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக்
 கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய
 செயல்பாடுகள் அமையும் !

 சமத்துவம் , சகோதரத்துவம் , சமதர்மம் ஆகிய
 கொள்ளைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்
 கொள்வேன் !

 மானுடப் பற்றும் மனதாபிமானமும் ஒன்றே எனது இரத்த
 ஓட்டமாக அமையும் !

 சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம்
 அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில்
 உறுதியேற்கிறேன் !"

Post a Comment

Previous Post Next Post