Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

உதவியாளரில் இருந்து கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 

 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் இயக்ககங்கள் / அலுவலகங்களில் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிடங்களில் உதவியாளர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களது பணியினை பணிவரன்முறை செய்யக்கோரி கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளன.

 மேற்காண் கருத்துருக்கள் பரிசீலிக்கப்பட்டு இணைப்பில் கண்டுள்ள பட்டியலில் இடம் பெற்ற 46 பணியாளர்களுக்கு , - சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள W.P.15318 / 09 , 25095/09 , W.P. ( M.D . ) 5300/10 மற்றும் 5301/10 இறுதித் தீர்ப்புக்குட்பட்டது.

> இனிவருங்காலங்களில் , உதவியாளர் பதவியில் ஏற்கனவே பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டு ஆணை வழங்கப்படும் பட்சத்தில் , அதற்கேற்ப பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலும் மீளப் பணிவரன்முறை செய்து திருத்திய ஆணை வழங்கப்படும்

> இவ்வாணையில் சில பணியாளர்கள் பல ஆண்டுகளாக பணிவரன்முறை செய்யப்படவில்லை என தெரிவித்து கோரியதன் அடிப்படையில் , சார்ந்த பணியாளர்களின் நலன் கருதி , தற்போது பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியில் பணிவரன்முறை செய்யப்படுவதுடன் , எதிர்காலங்களில் இவ்வாணை சார்ந்து ஏதேனும் பிரச்சனைகள் , வழக்குகள் மற்றும் இதர மேல்முறையீடுகள் ஏற்படின் , தற்போது பிறப்பிக்கப்படும் ஆணையில் குறிப்பிடப்பட்ட பணிவரன்முறை நாள் தாமாகவே இரத்தாகும் ( Deemed to be cancelled ) , ( த.பி.பா ) என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியில் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கப்படுகிறது.

மேலும் , இப்பணியாளர்கள் சார்பில் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியில் தற்போது பணிவரன்முறை செய்யப்பட்டுள்ள நாளில் தான் அப்பதவியில் பணியேற்றுள்ளாரா எனவும் பணிவரன்முறை செய்யப்படும் நாளில் அப்பதவிக்குரிய அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளாரா என்பதையும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பணிவரன்முறை ஆணையினை சம்மந்தப்பட்ட நபர்களுக்கு உடன் சார்பு செய்து அவர்களிடம் ஒப்புதல் பெற்று கோப்பில் வைக்குமாறும் , பணிவரன்முறை ஆணை விவரங்களை சம்மந்தப்பட்டவர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ளுமாறும் , தற்போது பட்டியலில் உள்ள நபர்கள் வேறு அலுவலகங்களுக்கு மாறுதலில் சென்றிருப்பின் அவ்வலுவலகத்திற்கு உடன் அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

 

 Superintendent Regularisation.pdf

Post a Comment

Previous Post Next Post