Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

                  தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்களுக்கு                           கொரோனா தொற்று !!


தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் மீண்டும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் அடங்கியுள்ளது. தற்போது ஆவடி சுற்றுவட்டார பகுதியில் 101 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது‌. 

இதில் நேற்று மட்டும் 33 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பூவிருந்தவல்லி என்ற தனியார் மருத்துவமனையிலும்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அரசு உயர் நிலை பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த 6 தேதி தடுப்பு ஊசி போட்டுள்ளார். இதையடுத்து கடந்த 16ஆம் தேதி மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஆசிரியரை பரிசோதித்த போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனது வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார்.


பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்பு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். ஆவடியில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி பின்பும் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post