Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 தங்கத்தின் விலை அதிரடி குறைவு

 


 

 

 

 உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் .

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 224 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,174 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 33,392 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 224 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,533 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 36,264 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ.1400 குறைந்து, ஒரு கிராம் ரூ. 67.30 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 67,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post