Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 தஞ்சை மாணவன் அசத்தல்..! வாயைப்பிளந்த அமெரிக்கா..!

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


''அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம்'' அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து'' Cubes in Space'' என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் 73 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் தஞ்சை அடுத்த கரந்தை பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன் என்ற கல்லூரி மாணவரும் கலந்து கொண்டார். தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ரியாஸ்தீன், உருவாக்கிய 2 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ நாசா தேர்வு செய்துள்ளது.

விஷன் சாட் V1 மற்றும் V2 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைகோள்கள் 33 மில்லி மீட்டர் உயரமும், 33 கிராம் எடையையும் கொண்டுள்ளது. உலகிலேயே மிகவும் எடை குறைவான இந்த இரு செயற்கைகோள்களும், 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் சோதனை ''செயற்கைகோள்களில், 11 சென்சார்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் விண்வெளியில் இருந்து பல வகையாக தகவல்களை அறியலாம் என்றும் ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம் எனவும் ரியாஸ்தீன் - '' தெரிவித்துள்ளார்.

மேலும் செயற்கைகோள்களுக்கு தேவையான, மின் சக்தியை செயற்கைக்கோளின் மேற்புறத்தில் உள்ள சோலார் செல்களில் இருந்து பெற முடியும் என்றும் அவை இரண்டையும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாசாவில் சவுண்டிங் ராக்கெட் விண்ணில் செலுத்த உள்ளதாகவும் ரியாஸ்தீன் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post