Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
அமெரிக்காவில் விவசாயத்தில் அசத்தும் தமிழர்களுடன் கலந்துரையாடும் அரசுப் பள்ளி ஆசிரியரின் ஓர் அசத்தல் சந்திப்பு

தாய் மண்ணே வணக்கம்

‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், ‘லேக் வியூ’ இயற்கை வேளாண்மை இணைந்து ‘தாய்மண்ணே வணக்கம்’ எனும் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கரோனா ஊரடங்கில் உலகமே கட்டுண்டு கிடந்தாலும்,நிறைய நம்பிக்கைகள் மக்களிடம் துளிர்விட்டிருக்கின்றன. ஊரடங்கு காலத்தில் மக்களை இணைக்கும் ஒரே வழியாக இருக்கும் இணையவழி மூலமாக பல்வேறு நிகழ்வுகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும்பயன்படும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்துமுன்னெடுத்து வருகிறது.


அந்த வகையில் கல்வியாளர்கள் சங்கமம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ‘லேக் வியூ’ இயற்கைவேளாண்மை குழுவினருடன் இணைந்து ‘தாய்மண்ணே வணக்கம்’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் விவசாயத்தில் அசத்
தும் அமெரிக்கவாழ் தமிழர்களுடனான ‘zoom’ செயலி வழியேயானசந்திப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ம்தேதி (சனிக்கிழமை) இரவு 7.30மணிக்கு நடைபெறுகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ்நகரில் வாழும் தமிழ் மக்கள் வாட்ஸ்-அப் குழுவாக இணைந்து, தங்கள் வீடுகளில் தோட்டம் அமைத்து வேளாண்மையில் மூலிகைத் தோட்டம், இயற்கை வேளாண்மை எனஅசத்தி வருவதோடு, மிகப்பெரியமுன்னெடுப்புக்கும் வழிகாட்டி
யுள்ளனர்.

ஒரே பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து பறைசாற்றிய விவசாயத்தின் பெருமையைப் பாராட்டவும், வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்க தமிழர்களிடையே பகிரவும் சிறப்பு விருந்தினராக எழுத்தாள
ரும், ஆசிரியருமான சிகரம் சதிஷ்குமார் பங்கேற்று உரையாடுகின்றார்.

இந்நிகழ்வில் அமெரிக்க தமிழ்குடும்பங்களோடு பல்துறை பிரபலங்களும் உரையாட உள்ளனர். இதில் பங்கேற்க கட்டணம்
கிடையாது. இந்தச் சந்திப்பில் இணைவதற்கான Zoom ID – 227 061 8029 (Password – SVM123).

கூடுதல் விவரங்களுக்கு 9994119002 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், ‘லேக் வியூ’ இயற்கை வேளாண்மை இணைந்து நடத்துகின்றன.

Post a Comment

Previous Post Next Post