Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
மாணவர் செயற்களம் நடத்தும் நூறாவது இணையத்தொடர் தமிழ்முழக்கம்

மாணவர் செயற்களம்: 



தமிழகத்தின் 38 மாவட்டங்களிலிருந்து கலை, இலக்கிய ஆர்வமிக்க சமூக அக்கறையுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்ப்பணியையும், பல்வேறு சமூகநலப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது 'மாணவர் செயற்களம்' என்னும் தன்னார்வ மாணவஅமைப்பு. இவ்வமைப்பினர்  'சமூகமே எந்திரி' என்னும் சிற்றிதழை நடத்திவருகிறார்கள். புதிய தலைமுறை, காக்கைச்சிறகினிலே, கல்விடுடே, உண்மை போன்ற பல்வேறு இதழ்கள் பாராட்டி கட்டுரைகள் வெளியிட்டன. ஆதரவற்ற முதியோர், மனநலம் குன்றியோர்க்கு நாள்தோறும் உணவளிக்கும் பணியையும், தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, எழுத்து, ஓவியம் உள்ளிட்ட கலைத்திறன்களை வளர்க்க பயிற்சிப் பட்டறைகள் நிகழ்த்தியும் தொடர்ந்து பல்வேறு தளங்களில் ஆக்கப்பூர்வமான நற்பணிகளை முன்னெடுத்துவருகிறார்கள். வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டை முன்னிட்டு பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நிகழ்த்தியும், கருத்தரங்கம் நிகழ்த்தியும் தமிழ்ச்சான்றோர் பலரின் பாராட்டைப்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு காலத்தில் நேர்மறை எண்ணங்களை விதைத்தல்:


    இக்கொரோனா பேரிடர் காலத்தில் மக்களிடையே  நேர்மறையான எண்ணங்களை விதைக்கவும் வளர்க்கவும் நேர்மறைச்சிந்தனைகளோடு உரையரங்கம், வழக்காடுமன்றம், பட்டிமண்டபம் போன்றவற்றை இணையத்தொடர் நிகழ்வாக நடத்தி வருகின்றனர். 
உலக இளையோர் நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்துறை ஆளுமைகளை உரைநிகழ்த்தச்செய்து இளையோர் வாரமாகக் கொண்டாடினர். கலை-இலக்கிய ஆய்வறிஞர்கள், தொலைக்காட்சிப் பேச்சாளர்கள், பத்திரிகை எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரையும் தொடர் முழக்கத்தில் பங்கேற்கச்செய்து மாணவர்களின் அறிவுச்செழுமைக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வழிவகுத்தனர்.

விழிப்புணர்வுப்போட்டிகள்:
           இணையவழியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கிடையே மாநில அளவிலான கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டிகளை நிகழ்த்தினர். அதிலும் குறிப்பாக பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் தமிழரும் நீர்மேலாண்மையும், உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், மலடாகிப்போன மண்ணும் மக்களும், மனித நேயமில்லா அறிவியல் போன்ற தலைப்புகளை முதல்சுற்றிலும்,  இறுதிச்சுற்றில் தேசியக்கல்விக்கொள்கை-2020, சூழலியல்தாக்கமதிப்பீட்டு வரைவு-2020 குறித்தான பார்வை என்னும் தலைப்புகள் தந்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டினர்.

100 ஆவது நாளில் 100 மாணவர்கள் 100 தலைவர்களைப்பற்றி 100 நிமிடங்கள் உரைவீச்சு:

 தொடர்ந்து 99 நாட்களாக 99 நிகழ்வுகளை இணையவழியில் வெற்றிகரமாக நடத்திய மாணவர் செயற்களம் நூறாவது இணையத்தொடர் தமிழ்முழக்கம் நிகழ்வை 31-08-2020 திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு கூகுள் மீட் செயலி வழி நடத்துகிறார்கள். இந்நூறாவதுநாள் நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100 மாணவர்கள் 100 தலைவர்களைப் பற்றி 100 நிமிடங்களில் உரைநிகழ்த்தும் சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள்.நூறாவதுநாள் நிகழ்வை மாணவர் செயற்களத்தின் அறிவுரைஞர், தே பிரித்தோ மேனிலைப்பள்ளி தமிழாசிரியர் முனைவர்.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (எ) தமிழ்முடியரசன் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றவுள்ளார். இவ்வரிய முயற்சியில் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு பணிவன்புடன் அழைக்கின்றோம்.. 

இணைப்பு:👇
https://meet.google.com/qbh-cofr-jnh

அழைப்பில் மகிழும்,
மாணவர் செயற்களம், தமிழ்நாடு.
தொடர்புக்கு:
8072886188,
9500314495, 9486237059, 8883224731.

Post a Comment

Previous Post Next Post