Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 🔴🛑தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

  வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார் 



  அரிசி  ஒன்பது கிலோ 750 கிராமும் , பருப்பு மூன்று  கிலோ 640 கிராம் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது

 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்

                             கொரோனா தொற்று பரவலால் சில  மாதங்களாக பள்ளிகள் திறக்காத நிலையில், கடந்த ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக வினியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, அரிசி ஆறரை  கிலோ, இரண்டு கிலோ 600 கிராம் பருப்பு , உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரிசி  ஒன்பது கிலோ 750 கிராம்; பருப்பு மூன்று  கிலோ 640 கிராம் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு உலர் பொருள்களை தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம்,வட்டார தனி திறன் உதவியாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ஆகியோர் செய்து இருந்தனர். அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் பொருள்களை பெற்றுச் சென்றனர். மாணவர்கள் வரமுடியாத பட்சத்தில் அவர்களது பெற்றோர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.சரியான நேரத்தில் இந்த பொருள்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.கடந்த மாதத்தில் முதல் தவணையாக மூன்று மாதங்களுக்கு அரிசியும்,பருப்பும் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் முறையாக தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு 65 நாட்களுக்கு உண்டான அரசியும்,பருப்பும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம்,வட்டார தனி திறன் உதவியாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி ஆகியோர் செய்து இருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post