Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
அன்னை தெரேசா பிறந்த நாள் நினைவார்த்த நாணயம்

 அன்னை தெரேசாவிற்கு
(26 ஆகத்து 1910 - செப்டம்பர் 5, 1997)இந்திய குடியரசு நினைவார்த்த நாணயம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனரும், தலைவருமான நாணயவியல் சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார்  பேசுகையில், அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட் சகோதரிஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை, எளியோர்களுக்கும், நோய்வாய்ப் பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.
அன்னை தெரேசா பிறந்த நாள் நினைவார்த்த நாணயம்


1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.
பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகளெனப் பலர் இவரைப் புகழ்ந்து வந்தாலும், பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்தார். இத்தகைய விமர்சனங்கள் கிறித்தபர் ஃகிச்சின்சு, மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் சாட்டப்பட்டது. இவர்கள் அன்னை தெரேசாவின் உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் எனவும் குற்றம் சாட்டினர். சில செய்தி ஊடகங்கள் அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பியும் செய்திகளை வெளியிட்டன.
இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் புனித தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.

இந்திய ரிசர்வ் வங்கி அன்னை தெரசாவின் பிறந்த நூற்றாண்டிற்கு  5 ரூபாய் நாணயம் வெளியிட்டது.
நாணயத்தின் இந்திய  இலச்சினையான அசோக தூணின் சிங்கம் உள்ளது. இந்தியில் 'சத்தியமேவ ஜெயதே' என பொறிக்கப்பட்டுள்ளது. இடது மேல் சுற்றளவில் இந்தியில் 'பாரத்' என்ற வார்த்தையும் வலது மேல் பக்கத்தில் 'இந்தியா' பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தில் இந்திய இலட்சினைக்கு கீழ் உள்ள சர்வதேச தசம எண்களில் ரூபாய் '5' என்ற மதிப்பைக் கொண்டிருக்கும்.

நாணயத்தின் தலைகீழ் மையத்தில் அன்னை தெரசா உருவப்படத்தை தாங்கியும், இடது மேல் சுற்றளவில் இந்தி மொழியில் 'மதர் தெரசா' என்ற சொற்களைக் கொண்டு, கீழ் சுற்றளவில் 'ஜன்மசதி' என்ற வார்த்தையுடன் இந்தியில் உள்ளது. சுற்றளவு பகுதியில் 'பிறப்பு நூற்றாண்டு' என்ற சொல் உள்ளது.
அன்னை தெரசாவின் உருவப்படத்திற்கு கீழே, '1910-2010' ஆண்டு  பொறிக்கப்பட்டுள்ளதுஇந் நாணயமானது நிக்கல் பிராஸ் உலோகத்தில் 6 கிராம் எடையில் 23mm.அளவில் வட்ட வடிவில் பம்பாய், கல்கத்தா, ஹைதராபாத், நொய்டா அக்கச் சாலையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது என்றார்.

Post a Comment

Previous Post Next Post