Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் போடுவது எதற்காக தெரியுமா ?

விஞ்ஞான விளக்கம் :விநாயகர் கடவுள் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக காட்சிதருபவர். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடிய மிகவும் எளிமையான ஹிந்து கடவுள் ஆவார். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன் இவரை எளிமையாக வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வழங்குவார். அதனால் தான் அருகம்புல்லையும், மூஞ்சூரையும் தனக்குப் பிடித்தமானவையாக வைத்திருக்கிறார். விநாயகரே முழு முதற்கடவுள். 

எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நிணைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை பாரத தேசத்தின் இதிகாச காவியமான  மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப்பெருமானே எழுத்துக்களுக்கு வித்திட்டவர் ஆகிறார். ஆகையினாலேயே எழுத தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் "உ" என்னும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும்  அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட விநாயகரை வழிபட்ட உடன் அனைவரும் தோப்புக்கரணம் போடும் பழக்கம் உண்டு. தோப்புக்கரணத்தின் விஞ்ஞான விளக்கத்தை திருச்சி, அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் கூறுகையில்,விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் போடும்போது உடல் நலம் மனநலம் உயிர் நலம் மேம்படுகிறது.

 

தோப்புக்கரணத்தினை வெளிநாடுகளில் நவீனபடுத்திசூப்பர்பிரைன் யோகா
என வடிவமைத்துள்ளார்கள். தோப்புக்கரணம் போடும்போது காதுகுழாய்களில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகளைத் தூண்டப்படுகிறது. இது மூளைக்கு மின் சமிக்ஞைகளை அனுப்புகிறது, இதனால் உடல், உள்ளம் மற்றும் அறிவாற்றல் தெளிவை அதிகரிக்கும். இதன் விளைவாக கூர்மையான மற்றும் அமைதியான மனம், குறைக்கப்பட்ட ADHD, பள்ளியில் சிறந்த செயல்திறன் மற்றும் கற்றல், தக்கவைத்தல் மற்றும் நினைவுகூருதல் ஆகியவைக்கு சிறந்த பயிற்சியாக அமைகிறது.தோப்புக்கரணம் மற்றும் சூப்பர்பிரைன் யோகா, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒரே மாதிரியாக, மூளையில் மின் செயல்பாட்டை அதிகரிக்கும். மனித மூளை ஒரு தசை போன்றது. அதன் அடிப்படையில், இவ்வகை யோகா உடல் ஆற்றலை தூண்டுகிறது . அதற்கு  பயிற்சி அளிக்கிறது. இது மென்மையானது, செய்ய எளிதானது, மேலும் இது அதிக நேரம் எடுக்காது. கீழ் முனைகளில் பூட்டப்பட்ட எந்த சக்தியும் மேல்நோக்கிச் செல்லப்பட்டு, உங்கள் மூளைக்குச் சென்று அதன் செயல்பாட்டை அதிகரிக்கும்.தோப்புக்கரணம் மற்றும் சூப்பர்பிரைன் யோகா பயிற்சி செய்தால், இதன் நன்மைகளை  அனுபவிக்கத் தொடங்குவீர்கள்:


  1. படைப்பாற்றலை அதிகரிக்கிறது.
  2. எந்தவொரு செயலை செய்யும் போது செயல்திறன் முன்பை விட சிறப்பாக இருக்கும். 
  3. புதிய திறன்களை மிக வேகமாக எடுத்துக்கொள்வார்கள்
  4. பல விஷயங்களைச் செய்ய குறைந்த முயற்சியில் ஈடுபட படுவர்.மனதை அமைதிப்படுத்துகிறது.
  5.  மன அழுத்தத்தை குறைக்கும், 
  6. பதட்டத்தை குறைக்கும் . 
  7. அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது,

இது மூளைக்கான யோகா என்பதால், பயிற்சி புரிபவரால் மேலும் நினைவுகூரவும் நினைவில் கொள்ளவும் முடியும். அவர்களுடைய மூளை மிகவும் கூர்மையாக இருக்கும்,  மன அழுத்தத்தை குறைக்கிறது.
மனச்சோர்வை நீக்குகிறதுநீங்கள் சமீபத்தில் நிறைய மனச்சோர்வடைந்திருந்தால் , ஒவ்வொரு நாளும் தோப்புக்கரணம் அல்லது சூப்பர்பிரைன் யோகா பயிற்சி செய்வது உடல் ,உள்ள ஆரோக்கியத்திற்கு உதவும்.மனநிலை மாற்றங்கள், ஏ.டி.எச்.டி, ஒ.சி.டி மற்றும் மீளக்கூடிய எந்தவொரு மனநலப் பிரச்சினைகளையும் சமாளிக்க இது உதவுகிறது.

 அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த உடற்கூற்று நிபுணர் எரிக் ராபின்ஸ் என்பவரின் ஆய்வின்படி தோப்புக்கரண பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புகள் சக்தி பெறுகின்றன என கண்டறிந்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கவும் பரிந்துரைத்துள்ளார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் அங் என்பவர் இடதுகையால் தோப்புக்கரணம் போடுவதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதால் மூளை கலங்கும் சக்தி பெறுவதாக கண்டறிந்துள்ளார். முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானின் அருளையும் அழகையும் தருவதோடு உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் பேணுவதற்கு தோப்புக்கரணம் காரணமாக அமைகிறது என்றார்.

Post a Comment

Previous Post Next Post