Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

EMIS - ல் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் - CEO, DEO, BEO, HMகளுக்கு அறிவுரைகள் - பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம்.

பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதத்தில் எந்த ஒரு நிலையிலும் தனிப்பட்ட முறையில் துறை சார்ந்த விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாகவோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வாயிலாகவோ பெற்று தொகுக்கும் பணியினை ( data collection consolidation ) மேற்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






* மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விவரங்களைக் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை ( EMIS ) வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப அனைத்து நிலையிலும் ( பள்ளிகள் , வட்டாரக் கல்வி அலுவலகங்கள் , மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வருவாய் மாவட்டக் கல்வி அலுவலங்கள் ) அவ்வப்போது ஏற்படும் விவரங்களை உடனுக்குடன் நிகழ்நிலையில் ( current updation ) வைத்திடும் பொருட்டு EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




* 16.02.2021 அன்று கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையில் அனைத்து வகைப் பள்ளிகள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் சார்ந்த களஅளவில் உள்ள நேரிடைத் தகவல்கள் அனைத்தும் கிடைக்கப் பெறும் இயங்கு தளமாக உள்ளது.




* இவ்விணையதளத்தில் பள்ளிகளுடைய விவரங்கள் , மாணவர்களின் தகவல்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் GT GOT மூன்று முக்கிய பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தானியங்கி முறையில் எளிமையாக அறிக்கைகள் தயாரித்து வழங்க முடிவதுடன் , பள்ளி அளவில் பயன்பாட்டில் உள்ள 30 - க்கும் மேற்பட்ட பதிவேடுகள் எண் மயமாக்கப்பட்டு உள்ளன.




* ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் பணி நிர்ணயம் , பணி மாறுதல் , பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.




* 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்விற்கான மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியும் இதில் அடங்கும்.




* இவ்வாறான இணையதளத்தில் பள்ளிகள் , வட்டார அலுவலகங்கள் , கல்வி மாவட்டங்கள் மற்றும் வருவாய் மாவட்டங்கள் அளவிலான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையதளத்தினை நிகழ்நிலையில் ( current updation ) வைக்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.




* எனவே , இனி வருங்காலங்களில் பள்ளிகள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களையும் EMIS மூலம் பெற்று உரிய நடடிவக்கை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. எக்காரணம் கொண்டும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மேற்படி விவரங்களை நேரடியாகப் பெறுவதைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Post a Comment

Previous Post Next Post