Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 தமிழகத்தில் கொரோனா பாதித்தோர், குணமடைந்தோர் விபரம் மாவட்ட வாரியாக

 

 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 31,892 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 288 பேர் உயிரிழந்து உள்ளனர். 20,037 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:  தமிழகத்தில் நேற்று மட்டும் 1,60,042 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன.  அதில்,31,892 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 7 பேர், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், 31,885 ‌ பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,377 ஆக அதிகரித்து உள்ளது.  மேலும் தற்போது வரை 2,47, 85,458 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

 இன்று கொரோனா உறுதியானவர்களில் 18,359 பேர் ஆண்கள், 13,533 பேர் பெண்கள். இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,18,086 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,13,253 ஆகவும் அதிகரித்து உள்ளது. 

 

 இந்த செய்தியையும் படிங்க

 அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளம் மேலும் ஓராண்டுக்கு நிறுத்தம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

 

20,037 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,18,982 ஆக உயர்ந்தது.

 288 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 130 பேர் தனியார் மருத்துவமனையிலும், 158 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 மாவட்ட வாரியாக விபரம்:


 

Post a Comment

Previous Post Next Post