Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 மூட்டுவலி (Joint Pain) எவ்வாறு உருவாகிறது? அதை தடுக்கும் வழிகள் யாது?

நம் நாட்டில் மூட்டுவலி (Joint Pain)  பொதுவாக 40 முதல் 50 வயது தாண்டிய அனைவரிடத்தும் காணப்படுவதாக கணக்கெடுத்து உள்ளனர். உலகெங்கிலும் இந்த நோய் பரவலாக இருப்பதாக அறியப்படுகிறது. அளவுக்கு மீறிய உடல் எடை உள்ளவர்களுக்கு வெகு சீக்கிரம் இந்த நோய் வந்துவிடுகிறது.

 


 

மூட்டுவலி வருவதில் பரம்பரை அம்சமும் பெரும்பங்கு வகிக்கிறது. இது தவிர உடம்பில் குறிப்பிட்ட மூட்டிற்கு மட்டும் அதிக வேலைப்பளு கொடுக்கிற நேரங்களில் மிக விரைவிலேயே அந்த மூட்டில் கீல்வாதம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டா கின்றன.

தையல்காரர்களுக்கு வரக்கூடிய கணுக்கால் மூட்டு வலி.  தறி அடிப்பவர்களுக்கு வரக்கூடிய மேல் கை,  முழங்கால் மூட்டு வலியை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

மூட்டு வலி வருவதற்கு அடிப்படையில் மூன்று காரணங்களை கூறலாம் நுண்ணுயிரிகள் போன்றவை ரத்த ஓட்டத்தின் மூலம் மூட்டுகளில் அருகில் சென்று வளர்ச்சியை ஏற்படுத்த மூட்டுவலி உண்டாகிறது. நோய் தொற்று காரணமாக உருவாகும் பல நச்சுப் பொருள்கள் மூட்டுகளைப்  பாதிக்கச் செய்யலாம்.

 மேலும் அடிபட்ட மூட்டின் இணைப்பு திசுக்கள் வலுவிழந்து காணப்பட்டாலும் அல்லது மூட்டுகளில் ஒவ்வாமை ஏற்படுவதாலும் மூட்டு வலி தோன்றலாம். மேற்சொன்ன மூன்று காரணங்களால் இளம் வயதிலேயே மூட்டு வலி வரக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

மூட்டுவலி (Joint Pain)  இளமையில் வந்தாலும் முதுமையில் தோன்றினாலும் அது வருவதற்கான உடற்செயலியல் நிகழ்வு மாறுவதில்லை. நம் உடம்பிலுள்ள மூட்டுக்களில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதைத் தவிர்க்க அவற்றிடையே மெத்தை போன்ற திசுப் பொருட்கள் உள்ளன.  

இந்த திசுப் பொருளை வலுப்படுத்தி மூட்டு உராய்வினை எண்ணெய் தவிர்க்க உறுதுணையாக இருப்பது கொலாஜன் எனப்படும் புரத பொருளாகும் . கொலாஜனில் இருக்கும் அதிகப்படியான நீர் சத்து சக்கரங்களுக்கு போடப்படும் மசகுபோல் வேலை செய்வதால் ஆரோக்கிய உடலில் மூட்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் மூட்டுவலியும் வருவதில்லை.


முதுமையிலும் மேற்சொன்ன காரணங்களால் உடல் நலம் கெடும் போது கொலாஜெனின் உற்பத்தி குறைகிறது. இதனால் மூட்டுகளுக்கு இடையே உள்ள நச்சுப்பொருள் பாதிக்கப்பட்டு வலுவிழக்கிறது.  அப்போது மூட்டெலும்புகள் உராய்ந்து  மூட்டு வலியை ஏற்படுத்துகின்றன.  சில வேளைகளில் உடலில் கொலாஜன் அளவு சரியாக இருந்தாலும், அதில் நீர் சத்து குறைவாக இருக்கும் போது மூட்டு எலும்புகள் உராய்ந்து  மூட்டு வலியை உண்டாக்கும்.  தொற்றினாலோ, அளவினாலோ, பண்பினாலோ கொலாஜனில் ஏற்படும் கோளாறுதான் மூட்டுவலி ஏற்பட அடிப்படையாகிறது.  

இத்தகைய கீல்வாதம் மூட்டுவலி நம் உடலில் உள்ள எல்லா மூட்டுக்களையும் பாதிப்பது இல்லை. இடுப்பு முதுகு முழங்கால் மேல் கை மூட்டு போன்ற முக்கியமான மூட்டுகளை மட்டுமே பாதிக்கிறது. இவற்றில் கூட முழங்கால் மூட்டில் வலி கீல் வாதம் தான் நம்மவரிடம் அதிகம் காணப்படுகிறது.  மூட்டு வலியின் போது மூட்டுகளை அசைப்பதுகூட சிரமமாக இருக்கும். முழங்காலில் சிறிது அடிபட்டாலும் கூட மூட்டு வீங்கி நீர் கோர்த்துக் கொள்ளும்.  இதனால் சின்ன சின்ன அன்றாட செயல்கள் செய்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.

மூட்டுவலியால் (Joint Pain)  அவதியுறுவோர்க்கு பல்வகை வலி நிவாரணி மாத்திரைகள் மருந்துகள் ஊசிகள் நடைமுறையில் உள்ளன.  இவைகளைத் தவிர மூட்டுகளின் மேல் அகச்சிவப்பு ஒளியை உமிழும் விளக்கு மூலமாக வெப்பத்தை செலுத்தி வலியை மறக்கக்கூடிய  வெப்ப சிகிச்சை முறையும் நடைமுறையில் உள்ளது.  மேற்சொன்ன வழிகளில் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு காணமுடியாது.

மேலைநாட்டு மருத்துவர்கள் செயற்க்கை மூட்டுகளை பொருந்தும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இம்முறையில் பாதிக்கப்பட்ட மூட்டு எலும்புகள் அகற்றிவிட்டு செயற்கை மூட்டுகள் பொருத்தி விடுகிறார்கள். இங்கு கொலாஜனுக்கு வேலை இல்லை. எனவே மூட்டுவலி திரும்ப வருமா என்று அச்சத்துக்கு இடமில்லை.  இச்சிகிச்சை முறை அதிக செலவு பிடிக்கக் கூடியது என்றாலும் எல்லாராலும் இதனை மேற்கொள்ள முடிவதில்லை.

 எனவே மூட்டு வலி (Joint Pain)  வருமுன் காக்கும் வழி முறைகளை கடைப்பிடிப்பது சிறந்த வழியாகும். வயதுக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகள், உடல் எடை அதிகமாகாமல் இருக்க உணவு முறை,  புரத சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றை பின்பற்றினால் மூட்டு வலி வராமல் தடுக்க முடியும்.

Post a Comment

Previous Post Next Post