Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 சட்டமன்றத் தேர்தல்-சிறப்பு பேருந்துகள் இயக்கம்; போக்குவரத்து கழகம் ஏற்பாடு


சட்டமன்ற தேர்தல் : சென்னையில் இருந்து எந்தெந்த ஊருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 

 முழுவிவரம்.!

 
 தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.


 

 
 
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும்‌ சட்டமன்றத்‌ தேர்தலை முன்னிட்டு, 01.04.2021 முதல்‌ 05.04.2021 வரையிலான 5 நாட்களுக்கு சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன்‌ சிறப்புப்‌ பேருந்துகளாக 3,090 பேருந்துகள்‌ என ஆகமொத்தம்‌ 14,215 பேருந்துகள்‌ சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.

மேலும்‌, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, சேலம்‌ மற்றும்‌ பெங்களூர்‌ ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும்‌ இயக்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்டுள்ள 5 நாட்களில்‌ 01.04.2021 முதல்‌ 03.04.2021 வரையில்‌ நாள்தோறும்‌ இயக்கப்படுகின்ற பேருந்துகள்‌ மற்றும்‌ சிறப்பு பேருந்துகள்‌ கோயம்பேடு புரட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்‌.
 
 
 

 
 

குறிப்பாக,

 
 
 விடுமுறை நாளான ஞாயிறு (04.04.202] மற்றும்‌ திங்கட்கிழமை (05.04.202]) ஆகிய இரு நாட்களுக்கு மட்டும்‌ இயக்கப்படுகின்ற பேருந்துகள்‌, பண்டிகை நாட்களான பொங்கல்‌ மற்றும்‌ தீபாவளி நாட்களில்‌ இயக்கப்பட்டது போன்று, பின்வரும்‌ அட்டவணையில்‌ கண்டுள்ள இடங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.

மேலும்‌, சட்டமன்ற தேர்தல்‌ முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 06.04.2021 முதல்‌ 07.04.2021 வரை தினசரி இயக்கப்படுகின்ற 2,225 பேருந்துகளுடன்‌ 2,115 சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படும்‌. மேலும்‌, சேலம்‌, மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர்‌ மற்றும்‌ கோயம்புத்தூருக்கும்‌, சேலம்‌, திருண்ணாமலை, வேலூர்‌ ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும்‌ என மொத்தம்‌ 1,738 சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படுகின்றன

Post a Comment

Previous Post Next Post