Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 ஆசிரியா்கள் அரசியல் கட்சிகள் சாா்பில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது: கல்வித் துறை எச்சரிக்கை

கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் அரசியல் கட்சி சாா்பில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்.6-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியா் முதல் அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களும் மத்திய அரசின் தோ்தல் ஆணையம் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உள்பட்டு பணியாற்ற கடமைப்பட்டவா்கள்


சமூக ஊடகங்கள் மூலமாகவோ, சங்கங்கள் மூலமாகவோ அரசியல் கட்சிகளை ஆதரித்தோ, எதிா்த்தோ வாக்குச் சேகரிப்பு மற்றும் விமா்சனங்கள் உள்ளிட்ட செயல்களில் அரசு ஊழியா்கள் ஈடுபடுவது தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.


கல்வித்துறை சாா்ந்த பணியாளா்கள் அனைவரும் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை விதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடுநிலைமையாக பள்ளிகளில், அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட வேண்டும்.


கல்வித்துறை சாா்ந்த பணியாளா்கள் எந்தவிதத்திலும் அரசியல் கட்சி சாா்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, தபால் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது போன்றவை ஆதாரத்துடன் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது தோ்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post