Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

மன்னிக்கவும் மாட்டோம்... மறக்கவும் மாட்டோம்: ஆசிரியர்கள் கொந்தளிப்பு 

தேர்தல்னு வந்தாலே எல்லா தரப்புக்கும் கொண்டாட்டம் தான். அதுவும் ஆட்சி நிறைவுல உள்ள காலத்துல, கோரிக்கையா கேட்டா எல்லாமே கிடைக்கும்னு அனைவருக்கும் தெரியும். அந்த வகையில இப்போ முதல் ஜாக்பாட் அடிச்சிருக்குறது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தான்.

கடந்த 2 ஆண்டுகளில் பலருக்கும் பதவி உயர்வு வாய்ப்பு பறிபோனதுடன், ஓய்வு பெற்றவர்கள் எந்தவித பணப்பலன்களும் பெற முடியாமல் போனது. இதனால், தங்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசு, கடந்த இருதினங்களுக்கு முன்பு ‘‘மறப்போம், மன்னிப்போம் என்ற மனிதாபிமான அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்கு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடுகிறோம்,’’ என்று அறிவித்தது.

இதனை தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு வீடுகட்ட வழங்கப்படும் முன்பணத்தொகையை 25 லட்சத்தில் இருந்து, 40 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வெளியாகியுள்ள இந்த அறிவிப்புகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், இதெல்லாம் தேர்தல்கால நாடகம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க, பணிநிரந்தரம் கோரி 10 ஆண்டுகளாக 12,483 பகுதிநேர ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனை திரும்பிக் கூட பார்க்காத ஆட்சியாளர்கள், திடீரென பணிநேரத்தை இரட்டிப்பாக்கி, 2,300 சம்பள உயர்வு ெகாடுத்துருக்காங்க. இதை கடுமையாக எதிர்த்துள்ள பகுதிநேர ஆசிரியர்கள், அரசுக்கு பாடம் புகட்டாம விடமாட்டோம்னு உறுதியெடுத்துருக்காங்க.

1 Comments

  1. நிச்சயம் உணர்த்துவோம்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post