Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

சைனிக் பள்ளிகள் என்றால் என்ன? எத்தனை பேருக்கு தெரியும்?

நாடு முழுவதும் புதிதாக மேலும் 100 சைனிக் பள்ளிகளை திறக்க உள்ளதாக இந்த வருட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சைனிக் பள்ளிகள் என்பது, சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கப்பட்டது. 

இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே. வி. கிருஷ்ண மேனன்னால் 1961 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. 

இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய இராணுவத்தில் சேரத் தயார்படுத்துவை முக்கிய நோக்கமாகக் இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.

 தற்போது நாடு முழுவதும் 28 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது.

 இந்தப் பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

இந்திய பாதுகாப்புத்துறைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காக இந்தப் பள்ளி அப்போது நிறுவப்பட்டது.

 இத்தனை ஆண்டுகளாக இந்தப் பள்ளிகள் மாணவிகளுக்கு இடமளிக்கப்படவில்லை. 

தற்போது முதல் முறையாக 6 பெண்களுக்கு இந்தப் பள்ளியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறைக்கு மாணவர்களை தயார் படுத்தும் சைனிக் பள்ளிகளிலும் பெண்களை சேர்ப்பதற்கான ஒரு தொடக்கமாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிசோரோமில் உள்ள சைனிக் பள்ளியில் இந்த நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாணவிகள் சேர்க்கைக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுவதாக மிசோரோம் சைனிக் பள்ளியில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 31 மாணவிகளின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர். இதன்பின்னர் நடத்தப்பட்ட தகுதி தேர்வின் மூலம் 6 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.

 அந்த மாணவிகள் கூறும்போது,

 தங்களின் தந்தையைப் போலவே தாங்களும் நாட்டுக்காக சேவை செய்ய நினைப்பதாக தெரிவித்துள்ளனர்.

அமராவதி சைனிக் பள்ளி என்பது  தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது.  

இங்கு தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது.

 இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது.

 இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன. 

இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். 

பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 

2020 ஆண்டு காலகட்டத்தில் அமராவதி சைனிக் பள்ளியில் 655 மாணவர்கள் பயில்கின்றனர்.

என்.டி.ஏ (என்.டி.ஏ இந்தியாவில் உள்ள மூன்று படைகளிலும் நுழையும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கிறது ).

 இந்திய கடற்படை அகாதமி (ஐ.என்.ஏ) இந்திய கடற்படைக்குள் நுழையும் கடற்படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு (அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு- AISSEE) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்,

 தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொதுப் பள்ளி கல்வி வழங்கப்படுகிறது.

 தலைமைத்துவ திறன் கொண்ட மாணவர்கள் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக ஆக பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். 

இந்திய குடிமக்கள் மட்டுமே பள்ளிக்குள் நுழைய தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

 6ஆம் வகுப்பில் சேர, 10இல் இருந்து 11 வயதுக்குள் இருக்க வேண்டும். 

9ஆம் வகுப்பில் சேர 13- இருந்து 14 வயதுக்குள் இருக்க வேண்டும். 

மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் 9ஆம் வகுப்பில் சேரத் தகுதி உண்டு. 

இந்தப் பள்ளியில் சேர்வதற்குத் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றும், நேர்முகத் தேர்விலும் உடல் தகுதியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

இந்தப்பள்ளியில் பட்டியல் வகுப்பினருக்கு 15 விழுக்காடும் பழங்குடி வகுப்பினருக்கு 7.5 விழுக்காடும் படை வீரர்கள், ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படையினரின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பள்ளியின் நோக்கம் சிறுவர்களை கல்வி, உடல் மற்றும் உளவியல் ரீதியாக தேசிய பாதுகாப்பு அகாதமி அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவதாகும்.

பள்ளியின் வண்ணங்களாக சாம்பல் மற்றும் இரத்த சிவப்பு வண்ணங்கள் உள்ளன. 

சாம்பல் என்பது வலிமையையும், சிவப்பு நிறம் கடமை மீதான பக்தி மற்றும் தோழமையைக் குறிக்கிறது. 

பள்ளி இலச்சினையில் உள்ள வாள்கள் வீரத்தையும் மற்றும் விளக்கு அறிவு மற்றும் ஞானத்தையும் குறிக்கிறது.

கோபுரம் தமிழகத்தின் கலாச்சாரத்தையும் மேன்மையையும் குறிக்கிறது.

இந்திரா காந்தி தேசிய பூங்காவின் பள்ளத்தாக்கில் 240 ஏக்கர் (0.97 கிமீ 2) பரப்பளவில் இப் பள்ளி வளாகம் உள்ளது. எல்லா பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட இந்த வளாகம் அமராவதி அணையின் பின்னணியில் காணப்படுகிறது.

மூன்று படைகளுக்கும் ஒரே போட்டித் தேர்வின் மூலம் என்.டி.ஏ தேர்வு இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது, 

அதைத் தொடர்ந்து தேர்வு வாரியம் நடத்தும் நேர்காணல் மூலமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

இப்பள்ளியின் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு திறந்த முறையில் நடத்தப்படுகிறது.

இங்குபணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களின் துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் கல்வியியலில் முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது சராசரி கல்வித் தகுதியாக உள்ளது. 

அனைத்து ஊழியர்களும் ஆசிரியர்களும் பள்ளி வளாகத்திற்குள் அல்லது அமராவதி நகரில் வசிக்க வேண்டும்

இங்கு பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் மட்டும் (சிறுவர் மற்றும் சிறுமியர்) நாள் தோறும் வீட்டிலிருந்து வந்து படிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post