Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

பிப்ரவரியில் வங்கிகளுக்கு இவ்வளவு நாள் விடுமுறையா.. அலர்ட்டா இருங்க..! 


வரவிருக்கும் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 28 நாட்களில், 12 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பணத் தட்டுப்பாடு ஏற்பாடு வாய்ப்புள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், இந்த காலத்தில் தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்படலாம். ஆக மக்கள் முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம். இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம் 

 எத்தனை நாட்கள் விடுமுறை 


பிப்ரவரி 12 - Losar/Sonam Lochhar 

பிப்ரவரி 13- இரண்டாவது சனிக்கிழமை 

பிப்ரவரி 14 - ஞாயிற்றுகிழமை 

பிப்ரவரி 15 - Lui-Ngai-Ni 

பிப்ரவரி 16 - வசந்த பஞ்சமி/சரஸ்வதி பூஜை 

பிப்ரவரி 19 - சத்ரபதி சிவாஜி ஜெயந்தி 

பிப்ரவரி 21 - ஞாயிற்றுகிழமை 

பிப்ரவரி 26 - வியாழக்கிழமை - ஹசரத் 

அலியின் பிறந்த நாள் * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே 

பிப்ரவரி 27 - சனிக்கிழமை - குரு ரவிதாஸ் ஜெயந்தி 

பிப்ரவரி 28 - 2021 ஞாயிற்றுக்கிழமை


தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை 


தொடர்ச்சியாக பிப்ரவரி 13 ஆரம்பித்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், இந்த விடுமுறை நாட்களில் அனைத்து வங்கிகளிலும் விடுமுறை என்பதால், ஏடிஎம்களில் பணம் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக மக்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.


முன்னதாக தயாராக இருங்கள் 


கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம். ஏனெனில் கடைசி நிமிடத்தில் கேஸ் மெஷினில் செலுத்திவிடலாம் என்றும் பலர் நினைப்பர். ஆனால் இவ்விடுமுறை நாட்களில் அனைவரும் இம்மெஷினையே நாடுவதால், மெஷின்களில் போடமுடியாமல் போகலாம்.


திட்டமிட்டு செயல்படுங்கள் 


பொதுவாக பலரும் அவ்வப்போது தேவைப்படும்போது ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நினைத்திருப்பர். ஆனால இதுபோன்ற நெருக்கடியான காலகட்டங்களில், அனைத்து ஏடிஎம்-களில் பணம் இருப்பது கடினம் தான். குறிப்பாக சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் மிக கடினம். ஆக கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட, முன்னதாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது தானே

Post a Comment

Previous Post Next Post