Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 TN-EMIS ல் கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகையினை சரியாக பதிவு செய்ய இயக்குநர் உத்தரவு.



மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் வழிக்காட்டுதல்களின்படி , “ கற்போம் எழுதுவோம் இயக்கம்'' - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 30.11.2020 முதல் கற்போர் மையங்கள் ( Leaners Literacy Centers ) துவங்கப்பட்டு முதற்கட்டமாக , ஒவ்வொரு கற்போர் மையத்திற்கும் குறைந்த பட்சம் 20 கற்போர்களை இலக்காகக் கொண்டு அந்தந்த தன்னார்வல ஆசிரியர்களின் வாயிலாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் , கற்போர் மையச் செயல்பாடுகள் , தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் வருகை விவரங்களை தொடர்ந்து கண்காணித்திடும் பொருட்டு 

  • பார்வை ( 2 ) -இல் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் ( சமக்ர சிக்ஷா ) திட்ட இயக்குநர் ஆலோசனைகளின் அடிப்படையில் TN - EMIS கைபேசி செயலியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகைப் பதிவு விவரங்களை பதிவேற்றம் செய்திடுமாறு  
  • பார்வை ( 3 ) இல் காணும் இவ்வியக்கக் கடிதத்தின்படி உரிய வழிக்காட்டுதல் நெறிமுறைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.


 இதனைத் தொடர்ந்து இணைப்பில் கண்டுள்ள 18.12.2020 அன்றைய TN - EMIS அறிக்கையின்படி கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகை பதிவு விவரங்கள் குறைந்த அளவில் TN - EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது . 

எனவே இனிவரும் நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மைய தன்னார்வல ஆசிரியர்கள் TN EMIS கைபேசி செயலியில் முன்குறிப்பிடப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்திட உரிய நடவடிக்கைகாக உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post