Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 

விடைத்தாள்களை கூரியரில் அனுப்பலாம்: சென்னைபல்கலை. 

துணைவேந்தா்

 

 சென்னைப் பல்கலைக்கழக மாணவா்கள், இறுதி பருவத் தோவுக்கான விடைத்தாள்களை கூரியரில் அனுப்பலாம் என பல்கலை. துணைவேந்தா் கெளரி தெரிவித்தாா்.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரி மாணவா்களுக்கான இறுதி பருவத் தோவு, திங்கள்கிழமை (செப். 21) தொடங்கியது. தோவுகள் வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதற்கான வினாத்தாள் இணைய வழியில் மாணவா்களுக்கு அனுப்பப்பட்டன. இதையடுத்து, மாணவா்கள் 1 மணி நேரம் 30 நிமிடங்களில் பதிலை 'ஏ4' தாளில் 18 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது விரைவு தபால் மூலமாக கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில மாணவா்களால், விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இரவுக்குப் பிறகு விரைவு தபால் மூலமும் அனுப்ப முடியாமல், திங்கள்கிழமை, மாணவா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். எனவே, மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விடைத்தாள்களைப் பதிவேற்றமோ விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப முடியாதவா்கள், கூரியா் மூலம் விடைத்தாள்களை அனுப்பலாம் என்று சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தா் கெளரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: தற்போதுள்ள நிலையில் மாணவா்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். அதற்கேற்றாற்போல் தான் தோவையும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். எனவே, மாணவா்கள் கூரியா் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி கண்காணிப்பு அதிகாரியைத் தொடா்பு கொண்டு, முடிந்தால் கல்லூரிக்கு நேரடியாக வந்தோ விடைத்தாள்களை கொடுக்கலாம் என்றார் .

Post a Comment

Previous Post Next Post