Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்   தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலை கல்வி ஊக்கத்தொகை திட்டம்



தமிழகத்தில் அரசு உதவி தேசிய பெண் குழந்தைக்கான இடைநிலை கல்வி ஊக்கத்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்களின் விபரங்களை வரும் அக்டோபர் 14ஆம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது

இதன் விபரம் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எஸ்சி எஸ்டி பிரிவு மாணவர்கள் தொடர்ந்து படிக்க உதவியாக தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலை ஊக்கத்தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ 3000 வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது

இதையடுத்து மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயதை எட்டியதும் திருமணமாகாமல் இருப்பின் அவர்களின் இந்த தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை படித்த அனைத்து மாணவிகளுக்கும் இந்த திட்டத்துக்கு தகுதியானவர்களாக கருதப்பட்டது

கடந்த 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலாண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட தகுதியான மாணவர்களை கண்டறிந்து விவரங்களை அனுப்ப வேண்டும் இது முக்கிய பணி என்பதால் அனைத்து மாவட்டங்களில் சிறப்பு குழுவை அமைத்து சரியான விவரங்களை அக்டோபர் 14ம் தேதிக்குள் தொகுத்து அனுப்பவேண்டும்

இதுதவிர 2019 -20 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளில் படித்த மாணவர்களின்  நாட்டு  நலப்பணி த்திட்டத்தில்(என் எஸ் எஸ்) பயிற்சி பெற்றவர்களின் விவரங்களை மின்னஞ்சலுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும்

Post a Comment

Previous Post Next Post