Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டம் 2021-2022 இணைய வழியில் ( National scholarship portal ) மூலம் செயல்படுத்துதல் - சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் , தருமபுரி -05 நக.எண் : 2637 04 2020 நாள் : 01.09.2021 

National scholarship portal
 National scholarship portal

பொருள் :

சிறுபான்மையினர் நலம் தருமபுரி மாவட்டம் - மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டங்கள் 2021-2022 ஆம் கல்வி ஆண்டு இணைய வழியில் ( National scholarship portal ) மூலம் செயல்படுத்துதல் - கல்வி நிறுவனங்களின் தலைமை அலுவலர் ( Hend of the Institution ) மற்றும் கல்வி நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர் ( Institute Nodal Officer ) ஆகியோரின் ஆதார் எண் விவரங்கள் UIDAI மூலம் சரிபார்த்தல் தொடர்பாக 

 மத்திய அரசால் சிறுபான்மையின மாணாக்கர்களுக்காக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டத்தில் நடைபெறும் சில முறைகேடுகள் மற்றும் போலி விண்ணப்பங்களை தடுக்கும் பொருட்டு கல்வி நிறுவனங்கள் தலைவர்கள் மற்றும் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர்களின் சுய விவரங்களை 

  • ஆதார் எண்,
  •  பெயர், 
  • பாலினம், 
  • பிறந்த தேதி, 
  • அலைபேசி எண்,

 ஆதார் எண்ணுடன் மின்னனு முறையில் ( UIDAI Unique Identification Authority of Indian ) சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டது . 

அதனடிப்படையில் தருமபுரி வருவாய் மாவட்டத்தில் NSP இணையதளத்தில் பதிவு செய்துள்ள தொடக்க நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை பள்ளிகள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி ஆதார் விவரங்களை இணைப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி சரிபார்த்து அதன் விவரங்களை C608.2021 க்குள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அளிக்குமாறு பார்வை 2 ற் காண் இவ்வலுவலக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது . 

ஆனால் நாளது வரை பெரும்பாலான பள்ளிகள் சுய விவரங்களை ( ஆதார் எண் பெயர்பாலினம் பிறந்த தேதி , அலைபேசி எண் ஆதார் எண்ணுடன் மின்னனு முறையில் சரிபார்க்காமல் இருப்பது தெரியவருகிறது . எனவே இனியும் காலம் தாழ்தாமல் விரைந்து இப்பணியை ( 03.09.2021 க்குள் முடிக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது 

இணைப்பு :

 UIDAI மூலம் சரிபார்க்காத பள்ளிகள் விவரம் ஓம் | முதன்மைக் கல்வி அலுவனர் , தருமபுரி 

பெறுநர் :

 1.அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் , 

2.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் 

( தங்கள் கட்டுப்பாட்டில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கும் பொருட்டு நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தருமபுரி அரூர் , பாலக்கோடு இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்படாதப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஆதார் விவரங்களை 03,09.202 க்குள் சரிபார்க்க அறிவரை வழங்கி , தங்களின் பொறுப்பில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆதார்விவரங்களை சரிபார்த்துள்ளனர் என சான்றளிக்க தெரிவிக்கப்படுகிறது .

Post a Comment

Previous Post Next Post