"கேள்வி எனும் கலை " பயிற்சி சார்ந்த (Feedback) பெறுதல் சார்ந்து - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் !
தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
பொருள் : ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - தருமபுரி மாவட்டம் - 2017-18 ஆம் கல்வி ஆண்டில் - உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு " கேள்வி எனும் கலை " என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது - பயிற்சியாளர்களிடம் இருந்து பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் சார்ந்த பின்னூட்டம் பெறுதல்- ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் - சார்பு .
பார்வை :
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களின் கடித ந.க.எண் : 137/2021 நாள் : 26.08.2021 பார்வையில் காணும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களின் கடிதத்தில் உள்ளவாறு 2017-18 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலமாக " கேள்வி எனும் கலை " என்னும் தலைப்பில் தருமபுரி மாவட்டத்தில் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது .
இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்களில் ஒரு பாடத்திற்கு 12 பேர் வீதம் ஐந்து பாடங்களுக்கு மொத்தம் 60 ஆசிரியர்களிடம் கட்டகம் சார்ந்த பின்னூட்டம் பெறவும் , பயிற்சியினுடைய விளைவை மதிப்பிடவும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .
மதிப்பீடு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி துறையின் வாயிலாக இப்பின்னூட்டம் பெறப்படவுள்ளது . தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களில் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு 31.08.2021 அன்றும் கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு 01.09.2021 அன்றும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் , நேரம் மற்றும் இடத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது .
சார்ந்த ஆசிரியர்களை விடுவித்து அனுப்பிடவும் , அவர்கள் தவறாது கலந்து கொள்வதை உறுதி செய்திடவும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .
இணைப்பு : பின்னூட்டத்தில் பங்கேற்க தெரிவு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர்பட்டியல் w [ meat . 108/21 | DT படு முதன்மைக்கல்வி அலுவலக்காக , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , தருமபுரி .
பெறுதல் :
- 1.மாவட்டக் கல்வி அலுவலர்கள் , தருமபுரி , பாலக்கோடு மற்றும் அரூர்
- 2 அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் , தருமபுரி மாவட்டம்
- 3.சார்ந்த ஆசிரியர்கள் ( வட்டாரக்கல்வி அலுவலர்கள் வாயிலாக )
நகல் :
- 1. முதன்மைக்கல்வி அலுவலர் , தருமபுரி அவர்களுக்கு அன்புடன் அனுப்பப்படுகிறது .
- 2. முதல்வர் , மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் , செட்டிக்கரை , தருமபுரி
Post a Comment