தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர் எண்ணிக்கை 4% - ஆணையத்தின் தலைவர் தகவல்
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதனால் சுமார் 400 மாணவர்கள் பயன் அடைந்தனர். இதேபோல, பொறியியல், கால்நடை, வேளாண்மை, மீன்வளம், சட்டம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதையேற்று, தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க
அரசு ஊழியர்களுக்கு கரோனா நிவாரண உதவி ரூ.4000 வழங்க வழங்கத் தடை கோரி உயர் நீதிமன்றதில் வழக்கு
இந்த ஆணையத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர்களான உயர்கல்வி, சட்டம், கால்நடை மருத்துவம், சுகாதாரம், பள்ளிக்கல்வி, வேளாண் துறைகளின் செயலர்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் நீதிபதி முருகேசன் கூறியதாவது:
பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே சேர்கின்றனர். இந்த நிலையை மாற்றி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கவே இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, துறைவாரியான கோப்புகள், தரவுகளை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். ஒரு வாரத்தில் தரவுகள் கிடைக்கும். அவற்றை கவனமாக ஆய்வு செய்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கலாம் என்பது குறித்து ஒரு மாதத்துக்குள் அரசிடம் பரிந்துரை அளிக்கப்படும். ஆணையத்தின் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 25-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏன் செருவதில்லை? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.
ReplyDeleteஆங்கிலம் சொல்லி கொடுப்போம். அவர்கள் சேர்ந்து விடுவார்கள்.
Post a Comment