Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 CPS ரத்து ? - அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மகிழ்ச்சி! 

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி சி.பி.எஸ் . ரத்து செய்யப்ப டும் அறிவிப்பு வெளியாக உள்ளதாக , அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்த தகவல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தி.மு.க. , தேர்தல் அறிக்கையில் தி.மு.க. , ஆட்சிக்கு வந்தால் சி.பி.எஸ் . திட்டம் ரத்து செய்யப்பட்டு , பழைய ஓய்வூதியம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 



கடந்த 2003 ம் ஆண்டுக்கு பின்னர் சி.பி.எஸ் . திட்டம் இருப்பதால் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு ஊழியர் கள் , ஆசிரியர்கள் போராட்டத்தில் பிரதான கோரிக்கையாக , இந்த கோரிக்கைதான் இடம் பெற்று வந்தது.

 

 இந்த செய்தியையும் படிங்க

 அமைச்சர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை



இந்நிலையில் , தி.மு.க. , தலைவர் ஸ்டாலின் முதல் வராக பதவி ஏற்றவுடன் தேர்தல் அறிக்கையில் உள்ள கோரிக்கைகள் ஐந்தினை நிறைவேற்ற , முதல் உத்தரவில் கையெழுத்திட்டார். அதில் ஒரு திட்டமான , அரசு டவுன்பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லும் திட்டம் நேற்று அமலுக்கு வந்து , மகளிர் மத்தியில் கடும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் , நேற்று அனைத்து அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் சங்கங்களின் வாட்ஸ் ஆப்பில் பிரதான செய்தியாக அடுத்த மாதம் ( ஜூன் ) 3 ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சி.பி. எஸ் . திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்கிற அறிவிப்பினை , முதல்வர்ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தக வல் பரவி வருகிறது . மிகவும் நம்பத்தகுந்த தகவலின்படி இந்த செய்தி வெளியாகி இருப்பதாக அதில் உறுதி தெரிவிக்கப் பட்டுள்ளது . இந்த செய்தி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மத்தியில் கடும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது.

5 Comments

  1. நிறைவேறினால் மிக்க மகிழ்ச்சி .....மற்றும் தி.மு.க.விற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நிறைவேற்றினால் மிக்க மகிழ்ச்சி தான்

    ReplyDelete
  3. நிறைவேற்றினால் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post