Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 கொரோனா கட்டுப்பாடு எதிரொலி:  கூடுதலாக பேருந்துகள் இயக்கம்


 பயணிக்க தடை

பேருந்துகளில் நின்றபடை பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் 300 முதல் 400 பேருந்துகள் வரை கூடுதலாக இயக்கப்படும் என  மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழ அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் பயணிகள் பேருந்துகளில் நின்றபடி பயணிக்க கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

 கூடுதல் பேருந்துகள்

இதனால், அரசு அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், 300 முதல் 400 பேருந்துகள் வரை கூடுதலாக இயக்கப்படும் என  மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமான உள்ள காலை, மாலை நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், கேளம்பாக்கம், மணலி,ஆவடி, பெரம்பூர், செங்குன்றத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 Comments

  1. சென்னை மட்டுமே தமிழ்நாடு இல்லை ,மற்ற உர் களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேன் டு ம்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post