Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 நடப்பு கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் , 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு.

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்.

புதியதாக தொடங்கப்படும் 25 தொடக்கப் பள்ளிகளுக்குத் தேவையான 25 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 25 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் , இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட ஆசிரியரின்றி உபரியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை இணைப்பு -1 ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாற்றி வழங்கி ஆணையிடப்படுகிறது . 

தரம் உயர்த்தப்படும் 10 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு , பள்ளி ஒன்றிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி தலைமையாசியர் ( நிலை 17 ரூ .36,700 -116200 ) மற்றும் 3 பட்டதாரி ஆசிரியர் ( நிலை 16 , ரூ .36400 -115700 ) வீதம் , 10 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தியும் , 30 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட உபரி பணியிடங்களிலிருந்து இணைப்பு - 2 ல் குறிப்பிட்டுள்ளபடி மாற்றி வழங்கி ஆணையிடப்படுகிறது . 

இவ்வாறு மாற்றி வழங்கப்படும் 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு பாடவாரியான சுழற்சி முறையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் முதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் , அடுத்தடுத்து வரும் 2021-22 மற்றும் 2022-23ஆம் கல்வியாண்டுகளில் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் நிரப்பப்பட வேண்டும் . 

இதனைத் தொடர்ந்து புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குவதற்கும் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் குறித்தும் கீழ்கண்டுள்ளவாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது .

முழுமையாக காண இங்கே சொடுக்கவும்

Post a Comment

Previous Post Next Post