Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

இன்றைய நாள்  [01/01/2021] வெள்ளிக்கிழமை உங்கள்  ராசி பலன் எப்படி இருக்கு !!

 

மேஷம் ;


இன்று அமைதி நிலவும். எதுவும் இதை பாதிக்க அனுமதிகாதீர்கள். உங்களை திசை திருப்பவும் ஆத்திரமூட்டவும் சிலர் முயலக் கூடும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். ஒய்வு மற்றும் நிம்மதிக்கான நேரங்களை பரிசாகவும் அருளாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும். அமைதியை எந்த சூழ்நிலையிலும் இழக்கக் கூடாது.


ரிஷபம்


இன்று பேச்சுத் திறனும் விடாமுயற்ச்சியும் பல தடைகளை வெற்றி கொள்ள உதவும். நெருக்கடி நிலையை தீர்க்க உதவும் விடாமுயற்ச்சியின் பலனை இன்று உணர்வீர்கள். உங்களது திட்டத்தை வெற்றியுடம் முடிப்பீர்கள். எந்த தடையையும் வெற்றி கொள்வீர்கள்.


மிதுனம்


மன நிலையிலும் உடல் நிலையிலும் உச்ச கட்டத்தில் இருக்கிறீர்கள். உங்களது உற்சாகம் சுற்றியிருப்பவர்களை உற்சாகப்படுத்தும். உங்களது பணியின் திறனும் அளவும் அதிகரிக்கும். தீர்க்கப்படாமல் உள்ள பணிகளை நிறைவேற்ற இதை பயன் படுத்திக் கொள்ளுங்கள். இன்று உங்கள் வேலைத் திறன் உச்சக் கட்டத்தில் இருக்கும்.


கடகம்


உங்களுக்கு ஒப்புதல் தேவைப்படும் உயர் நிலையில் உள்ள அதிகாரிகளுடனான சச்சரவுகளை சிறிது காலத்திற்கு தவிர்க்கவும். நிலுவையில் ஏதேனும் முக்கியமான விஷயங்கள் இருந்தால், அதிகார அமைப்புகளுடனான விவகாரங்கள் தடைகளை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமாகும்.


சிம்மம்


உங்கள் எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டு, முக்கியமான விஷயங்கள் தெளிவாகும். பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். எண்ணத் தெளிவு வெற்றிப் பாதையில் உங்களை கொண்டு செல்லும்.


கன்னி


நீங்கள் வேடிக்கை விளையாட்டில் ஈடுபட விரும்பினால் அதற்கு இது சரியான நேரமாகும். வீட்டிற்கு வெளியே சென்று நண்பர்களுடன் பார்டியில் கந்து கொண்டு நடனமாடுங்கள். முடிந்த அளவு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருங்கள். ந்ந்ங்களும் நண்பரக்ளும் இதை நெடுநாட்களுக்கு நினைவில் வைத்திருப்பீர்கள்.


துலாம்


இன்று சுய நம்பிக்கையில் முன்னேற்றம் இருக்கும் நாள். இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது ஆக்கப்பூர்வ தன்மை, தன்னம்பிக்கை சுற்றியிருக்கும் அனைவரையும் கவரும். இதனால் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

விருச்சிகம்


நீங்கள் சிக்கலான சூழ்நிலையிலிருந்து வெளிவர உங்களது அனைத்து திறன்களையும் உபயோக படுத்துவீர்கள். இந்த நிலை உங்களால் ஏற்படாவிட்டாலும் இது உங்களை பாதிக்கும். உறுதியான கௌத்தை வெளிபடுத்தி வெற்றி காணுங்கள்.

தனுசு


இன்று பணி மற்றும் இல்லம் ஆகியவற்றின் பல தரப்புகளில் நெருக்கடிகள் உண்டாகலாம். பலர் பதிலை பெருவதற்காக உங்களிடம் வரக் கூடும். மனதை ஒரு நிலை படுத்தி, கடமைகளில் முக்கியமானது எது என்பதை அறியவும். பொறுப்புள்ளவராக உண்மையாக இருப்பது இன்று ஒரு சவாலாக இருக்கும். பணி மற்றும் குடும்பம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டு, சோதனைகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

மகரம்


இன்று பல நாட்களாக தொல்லைகொடுத்து வந்த பிரச்சைனையை தீர்க்க தொடங்கும் நாள். பிரச்சனையின் மையத்தை கண்டுபிடித்து அதை மேலோட்டமாக அல்லாமல், முழுமையாக தீர்க்கவும். இதனால் நீங்கள் புதுபிக்கபட்டவராக உணர்வீர்கள்.

கும்பம்


இன்று அமைதியான சூழ்நிலையில் தியானம் செய்ய சிறந்த நாள். நீங்கள் கடினமாக உழைத்திருப்பதால், இன்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அதிக வேலை உடலுக்கு நல்லதல்ல. இந்த தீய சக்தியை தியானத்தால் எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்.

மீனம்


இன்று நீங்கள் அமைதியையும் மன சாந்தியையும் பெறுவீர்கள். அது உங்களுக்குள்ளேயே கிடைக்கும், வெளியே தேடவேண்டாம். இதமாக தியானம் செய்து, ஆத்ம சாந்தி நாடும் குழுவிடம் சேர்ந்து கொள்ளுங்கள். கோயிலுக்கு சென்று தானம் செய்யுங்கள்.

Post a Comment

Previous Post Next Post