Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனவரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் எட்டு மண்டலங்க ளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என துணைவேத் தர் கே.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார் .

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக சென்னை மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக்கல்லூரியின் கீழ் செயல்பட்டு வரும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . இந்தநிகழ்ச்சிக்குதுணைவேந்தர் கே.பார்த்தசாரதி தலைமைவகித்து சென்னை மண்டல மையத்தின் கையேட்டை வெளியிட்டுப் பேசியது : தமிழகத்தில் தற்போது 91 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கற்றல் வளமையங்கள் மற்றும் தேர்வு மையங்களாக செயல்பட தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன . 

அரசு கலை , அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் இப்போது அதே கல்லூரி மூலமாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்க முகத்தில் சேரலாம் . 

அவர்களுக்கான வகுப்புகள் அதே கல்லூரியில் நடத்தப்படும் . கற்றல் மையங்களில் தற்போது வரை சுமார் 8,000 - க்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் . இந்த ஆண்டு 10 , 000 மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம் . திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் விவரங்களை பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது

எனவே , டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் , அவர்களுடைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் . கடந்தாண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தில் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத் தப்பட்டது . இதனால் 1,000 - க்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர்

கரோனா தொற்று தற்பொழுது குறைந்து வருவதால் அரசின் வழிகாட்டுதல்களைப் பெற்று ஜனவரி மாதம் எட்டு மண்டலங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் . 

இதன் மூலம் அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவர் . திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இணையவழியில் தேர்வு நடத்தப்படுகிறது . தற்பொழுதும் மாணவர்களுக்கு இணையவழியில் தேர்வு நடைபெற்று வருகின்றன . 

அரசு வழி காட்டுதலின் அடிப்படையில் அடுத்த ஆண்டு தேர்வு எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றார் . இந்த நிகழ்ச்சியில் கல்லூரிக் கல்வி இயக்கக சென்னை மண்டல இயக்குநர் ஆர்.இராவணன் , திறந்தநிலைப் பல்க லைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினர் என்.தனலட்சுமி , சமுதா யக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் இரா.பிரகதீஸ்வரி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர் .

Post a Comment

Previous Post Next Post