Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 இந்தியா வந்தது உருமாறிய கொரோனா; 6 பேருக்கு பாதிப்பு உறுதி!

பிரிட்டனில் பரவி வரும் புதிய உருமாறிய கொரோனா பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  •  கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த பயணிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.

  • இதுவரை 33,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் 113 பேருக்கு கொரோனா உறுதியானது. இவர்களது சளி மாதிரி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் ''6 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா ''பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.  இவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி சோதனை செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post