Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 

 மாநில அமைப்பு, கூட்டணி அலுவலகம் : 41 , முக்தாருன்னிசா பேகம் தெரு , எல்லீஸ் சாலை , சென்னை - 600 002  



TAMIL NADU PRIMARY SCHOOL TEACHERS ' FEDERATION Office : 41 , Muktharunnisha Begum Street , Elis Road , Chennai - 600 002 , Ph : 044-48581553 www.tript.org E - mail : tamilnadu.trpt@yahoo.con inptſthal@gmail.com

பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 07/2020 நாள் : 16.09.2020 

பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே ! வணக்கம் . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அங்கம் வகிக்கும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ( STFI ) சார்பில் 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தேசிய கல்விக் கொள்கை - 2020 தொடர்பான மிகச் சிறப்பானதொரு இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது . கருத்தரங்கில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் . C.N. பார்தி அவர்கள் தொடக்கவுரை ஆற்றுகிறார் . சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி நீதியரசர் . அரிபரந்தாமன் அவர்கள் கருத்தரங்க உரை நிகழ்த்துகிறார் . இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அனைத்து இணைப்புச் சங்கங்களின் தலைவர்கள் கருத்துரை ஆற்றுகின்றனர் .

 இக்கருத்தரங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் பெருமளவில் இதில் பங்கேற்க வேண்டும் . மாநில , மாவட்ட , வட்டார , நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் எக்காரணம் கொண்டும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் . STFI கருத்தரங்கத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு ? என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம் . இக்கருத்தரங்கம் நாம் நடத்துகிற கருத்தரங்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒவ்வொரு வட்டார , நகரக் கிளைகளிலிருந்தும் குறைந்தது 20 பேராவது இக்கருத்தரங்கில் இணைந்திட வேண்டும் . அதிகபட்சமாக எவ்வளவு பேர் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் . 

இக்கருத்தரங்கில் இணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உடனடியாக மாவட்ட , வட்டார , நகரக் கிளைகளின் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நம் இயக்க whatsapp குழுக்கள் அனைத்திலும் உடனடியாகச் செய்திகளைப் பகிருங்கள் . whatsapp குழுக்களில் செய்திகளைப் பகிர்வதோடு நின்றுவிடாமல் இயக்க உறுப்பினர்களோடு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்தரங்கில் இணைவதை உறுதிப்படுத்துங்கள் . தங்கள் கிளையிலிருந்து கருத்தரங்கில் இணையவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலைத் தயார் செய்யுங்கள் . பெயர்ப்பட்டியலை மாவட்டச் செயலாளர்களுக்குத் தவறாது அனுப்புங்கள் . 

மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக வட்டார , நகரக் கிளைகளோடு தொடர்புகொண்டு இப்பணியைத் துரிதப்படுத்துங்கள் . ஒவ்வொரு கிளையிலிருந்தும் கருத்தரங்கில் இணைப்பவர்களின் பெயர்ப்பட்டியலைப் பெற்று மாவட்ட அளவில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துங்கள் . 07.09.2020 அன்று நம் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் மாவட்ட வாரியாகக் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை விவரங்கள் மாநில மையத்தில் உள்ளது . அந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதையும் மாவட்ட , வட்டார , நகரக் கிளைப் பொறுப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் . 

எனவே , 07.09.2020 கருத்தரங்கில் பங்கேற்ற நம் இயக்க உறுப்பினர்களை விட அதிக எண்ணிக்கையில் 18.09.2020 கருத்தரங்கில் நம் இயக்க உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டிய அவசியம் உள்ளது . 18.09.2020 STFI இணையவழிக் கருத்தரங்கிலும் நம் இயக்கத்தின் சார்பில் மாவட்ட வாரியாகப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை நாம் கணக்கிட வேண்டியுள்ளது . ஒட்டுமொத்தமாக நம் இயக்கத்தின் சார்பில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதையும் கணிக்கிட வேண்டியுள்ளது . எனவே , நம் இயக்கத்தின் சார்பில் கருத்தரங்கில் பங்கேற்கும் தோழர்களை அவர்களது பெயருடன் , TNPTF மற்றும் மாவட்டத்தின் பெயரையும் சேர்த்துப் பதிவிடக் கூறவும் . ( 2 - ம் ) Murugesan , TNPTF , Tirunelveli . 

கருத்தரங்கில் இணையும் நம் இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் Zoom App link வழியாகவே இணைந்திடக் கூறுங்கள் . அதுவே மிகவும் எளிது என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள் . கடந்த காலங்களில் 5 , 6 மணி நேரம் பயணம் செய்து ஒரு நாள் முழுவதும் செலவழித்து கருத்தரங்கங்களில் பங்கேற்றுள்ளோம் . ஆனால் , இன்றைய பொது முடக்கச் சூழலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெறும் இக்கருத்தரங்கில் இணைந்து வீட்டிலிருந்தபடியே 2 மணி நேரத்தை மட்டும் செலவழிப்பது என்பது மிகவும் எளிதானது . நாம் இயக்க நிகழ்வுக்காக நம் இயக்க உறுப்பினர்கள் ஒரு 2 மணி நேரம் மட்டும் செலவழிப்பதை உறுதிப்படுத்துங்கள் .

 07.09.2020 மற்றும் 18.09.2020 ஆகிய இணையவழிக் கருத்தரங்கங்கள் தொடர்பாக விரைவில் நடைபெறவுள்ள நம் பேரியக்கத்தின் நேரடி மாநிலச் செயற்குழுவில் விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது . எனவே , மாவட்ட , வட்டார , நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் 18.09.2020 கருத்தரங்கில் தங்கள் கிளை உறுப்பினர்களின் அதிகபட்சமான பங்கேற்பை உறுதிப்படுத்துமாறு மாநில மையம் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது . 

Post a Comment

Previous Post Next Post