Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

  ஊதிய உயர்வுக்கு PAY MATRIX ல் LEVEL இல்லை - ஊதிய உயர்வு தொடர்ந்து கிடைத்திட ஆணை வழங்கிட வேண்டுகோள்

அனுப்புநர்:

ஒய்.ஆர்.செல்வராஜ்,

இடைநிலைஆசிரியர், 

ஊ.ஒ.தொ.பள்ளி, பெரியம்மாபாளையம் (மேற்கு),   

வேப்பந்தட்டை ஒன்றியம், 

பெரம்பலூர் மாவட்டம். 621110.

பெறுநர்:

மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள், 

தொடக்கக் கல்வி இயக்ககம், 

சென்னை 6.

மதிப்புடையீர் வணக்கம்,

பொருள்:

 

Pay Matrix Table இல் 2020 ஜனவரியுடன் Pay level 10இல் Pay cell 40 உடன் ஆண்டு ஊதிய உயர்வு ஸ்டேஜ் முடிவடைகிறது. அதனை தொடர்வதற்கு ஆணை வழங்கிட பணிவான வேண்டுகோள்.

வணக்கம். நான் முதன் முதலில்  இடைநிலை ஆசிரியராக 11.01.1999 அன்று நியமனம் பெற்றேன். இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் 10.01.2009 அன்று முதல் தேர்வுநிலை ஊதியம் 3 விழுக்காடு பெற்று வந்தேன். அதன் பின்னர் 11.01.2009 முதல் 31.03.2013 முடிய கூடுதல் 3 விழுக்காடு கருத்தியலாகவும் 01.04.2013 முதல் பணப்பயனும் பெற்று வருகிறேன். 

என்னுடைய பணிக் காலத்தில் உயர் கல்வித் தகுதிக்கான (பிலிட்.பிஎட்) ஊக்க ஊதிய உயர்வு 17.12.2013 அன்றும், அடுத்த உயர் கல்விக்கான (எம்.ஏ) ஊக்க ஊதிய உயர்வு  04.01.2016 லிருந்தும் பெற்று வருகிறேன்.எனக்கு இது நாள் வரை பதவி உயர்வு இல்லாத காரணத்தினால் தொடர்ந்து இடைநிலை ஆசிரியராகவே பணிபுரிந்து வருகிறேன். 

தற்போது 01.01.2020 ல் ஆண்டு வளர் ஊதிய உயர்வான Pay Matrix Table இல் Paly level 10 cell 40 இல் 65500 நிறைவு பெற்றுவிட்டது. இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு ஜனவரியில் இடைநிலை ஆசிரியராகப் பணி நியமனம் பெற்று தரநிலை மாறாமல் 2800 தர ஊதியத்துடன் மேற்கண்ட நிலைகளை கடந்து வந்த எனக்கு 2021 ஜனவரிக்கான ஆண்டு வளர் ஊதிய உயர்வுக்கு PAY MATRIX ல் LEVEL இல்லை. எனவே எனக்கு 2021 ஆம் ஆண்டிற்கான வளர் ஊதிய உயர்வுக்கு நீட்டிப்பு ஏற்படுத்தி தர ஆவன செய்யுமாறு தங்களுக்கு பணிந்தனுப்பப் படுகிறது.


தங்கள் உண்மையுள்ள,

ஓய்.ஆர்.செல்வராஜ்.

முன் நகல் பணிந்தனுப்பப்படுகிறது. 

**********


இயக்கப் பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் :

மேற்காணும் விண்ணப்பம் தொடர்பாக அவரவர்கள் வட்டார கிளையில் உள்ள பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தனித்தனியாக விண்ணப்பங்களை கணினியில் DTP செய்து கையொப்பத்துடன் அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு நகலினை மாநில அமைப்புக்கு அனுப்பி வைக்குமாறும், கல்வி மாவட்டச் செயலாளர்கள் வழிகாட்டுதல் குறிப்புகளை வட்டார செயலாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பொறுப்பாளர்களும் இது தொடர்பாக முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


வாழ்த்துக்களுடன் அண்ணன்,

வா.அண்ணாமலை, 

ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், 

AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) 

 அலைபேசி:9444212060, 

மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.


  • மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.
  • அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.
  • க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி.

Post a Comment

Previous Post Next Post