Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும் Online Training For Teachers / ஆசிரியர்களுக்கு  இணைய வழி  பயிற்சி

பள்ளிக்கல்வி- WWF - India-- " ஓருலகம் - ஒரு வீடு " ( One Earth One Home ) இணைய வழியில் அறிவியல் ஆசிரியர்களுக்கு சுற்றுச் சூழல் கல்வி பயிற்சி அளித்தல் - அனுமதி ஆணை வழங்குதல் - சார்பு . 

WWF India நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கடிதம் , நாள் : 18.08.2020 

இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம்- இந்தியா ( WWF -India ) என்ற தொண்டு நிறுவனம் " ஓருலகம் - ஒரு வீடு " ( One EarthOne Home ) எனும் சுற்றுச் சூழல் கல்வி திட்டத்தின் மூலம் அறிவியல் ஆசிரியர்களுக்கு இப்பொருள் குறித்து இணைய வழியில் பயிற்சி அளிக்கவுள்ளதாக பார்வையில் காணும் கடிதம் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிகழ்ச்சியில் துறை வல்லுனர்களின் கருத்தரங்கு , வனவிலங்கு மற்றும் பல்லுயிர் குறித்த கலந்துரையாடல்கள் , உயிரின பன்மைத்துவம் ( Bio Diversity ) குறித்த புரிதல் ஆகியன அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது , மேற்கண்ட திட்டத்தினை ( One Earth One Home ) செயல்படுத்திட WWF India நிறுவனத்திற்கு அனுமதி ஆணை வழங்கப்படுகிறது . மேலும் , விருப்பமுள்ள ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட இணைய வழி பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு சார்ந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 

                                                                                              - பள்ளிக்கல்வி இயக்குநர்
 பெறுநர் 
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் 
நகல் திரு.சரவணன் , Co - Ordinator , 
WWF - India 
Mob : 9176325015 Email : ssaravanan@wwfindia.net  


Post a Comment

Previous Post Next Post