Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

JACTTO - GEO  இன்றைய ஜாக்டோ - ஜியோ அறிக்கை 

 ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) ( Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations ) 




ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் . 11 , 12 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் அனைத்து தரப்பிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் நலனை மையப்படுத்தி புதிய பாடங்களை கைவிட்டு பழைய பாடப்பிரிவுகளையே தொடர்வதற்கு அனுமதித்து அறிவிப்பு வெளியிட்டார்கள் 

  1. . மாணவர்கள் , 
  2. பெற்றோர்கள் , 
  3. கல்வியாளர்கள் சார்பிலும் , 
  4. ஜாக்டோ - ஜியோ சார்பிலும் பெரிதும் வரவேற்று பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் . 


அரசுப்பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு 7.5 விழுக்காடு வழங்குவதற்கும் , சட்டப் பேரவையில் சட்டம் இயற்றுவதற்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை பெரிதும் வரவேற்று பாராட்டுகிறோம் . கொரோனா நிவாரண நிதியாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒருநாள் ஊதியத்தை வழங்கியுள்ளதையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அதற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளதையும் தங்கள் மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறோம் . கொரோனா கால நிவாரணப் பணிகளிலும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசுப்பணியாளர்கள் தன்னலமற்ற தியாகத்துடனும் , அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றி வருகிறோம் .

 பணப்பயன் இழப்பால் பிள்ளைகளின் திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது . பொருளாதார பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் . மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் . அவர்கள் காலத்திலும் , மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் காலத்திலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன . போராட்டங்கள் முடிந்தவுடன் போராட்டங்கள் நடத்தியவர்களை அழைத்துப்பேசி அவர்கள் மீதுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை இரத்து செய்து அரசுடன் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசுப் பணியாளர்களின் உறவினைப் பாதுகாத்து வந்துள்ளார்கள் . 

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் எவ்வித உள்நோக்கமுமின்றி ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசுப் பணியாளர்கள் நலனை மட்டுமே மையப்படுத்தி போராடிய இணைப்புச் சங்கங்களின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்களின் கோரிக்கை விண்ணப்பத்தை அனுப்பியுள்ளோம் . ஜாக்டோ - ஜியோ அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுங்கள் , இணக்கமான அணுகுமுறையுடன் சுமூகத்தீர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பளித்திடுகிற வகையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான 17 பி குற்றச்சாட்டுக்களை இரத்து செய்து ஓய்வுபெற அனுமதிக்கப்படாதவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கும் , பணப்பயன்களைப் பெறுவதற்கும் உதவிடுமாறு ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் மீண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் .

Post a Comment

Previous Post Next Post