Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
ஆசிரியர்கள்/அரசு ஊழியர்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட தொழில் வரி விவரம் 
தொழில் வரி - திண்டுக்கல் மாவட்டம் 2019-2020 - ஆம் ஆண்டிற்கு இரண்டாம் அரையாண்டிற்கான தொழில்வரியை பணியாளர்களின் பிப்ரவரி 2020 - ஆம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்வது - தொடர்பாக .

பார்வை : 1994 - ஆம் வருடத்திய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 198 A மற்றும் B. பார்வையில் கண்டுள்ள தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 198 - B உட்பிரிவு 13 ( 2 ) -ன் படி குறித்துரைக்கப்பட்ட வரி வீதமானது ஊராட்சி மன்றத்தால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படுதல் வேண்டும் . அவ்வாறு திருத்தியமைக்கின்ற தேதிக்கு அடுத்து முன்பு விதிக்கப்பட்டிருந்தவாறான வரியில் நூற்றுக்கு இருபத்தைந்து விழுக்காட்டிற்குக் குறைவாகவோ , நூற்றுக்கு முப்பத்தைந்து விழுக்காட்டிற்கு அதிகமாகவோ இல்லாமல் வரியானது உயர்த்தப்படுதல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

தொழில் வரி
எனவே இதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் , ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் உள்ள அரசு அலுவலர்கள் . வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு / தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 2019-20 - ஆம் இரண்டாம் அரையாண்டிற்கு கீழ்கண்ட திருத்திய விவரப்படி தொழில்வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும் . தொழில்வரி பிடித்தம் செய்யப்பட வேண்டி வருமானம் ( ஊதியம் மற்றும் அனைத்துப் படிகளும் ) விபரம்

ஆறு மாத வருமானம் பிடித்தம் செய்ய வேண்டிய தொழில் வரி :

1) ரூ .21000 / -வரை வரி இல்லை 
2) ரூ .21001 முதல் 30000 வரை ரூ .150 /
3) ரூ .30001 முதல் 45000 வரை ரூ .375 / 
4) ரூ .45001 முதல் 60000 வரை ரூ .735 / 
5) ரூ .60001 முதல் 75000 வரை ரூ .1100 / 
6) ரூ .75001 - க்கு மேல் ரூ .1250 / 


1. மேற்கண்டவாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து ஊதிய விபரப்பட்டியல் பெற்று , தொழில்வரி நிர்ணயம் செய்து பிப்ரவரி 2020 - ஆம் ஊதியத்தில் வசூல் செய்யப்பட வேண்டும் .

 2.வசூல் செய்யப்பட்ட தொகைகள் அடுத்த நாளே சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கில் இருசால் செய்யப்பட வேண்டும் . மேலும் , அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் இப்பொருள் தொடர்பாக சுற்றிக்கை சார்பு செய்து ஒப்புதல் பெற அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி.ஊ ) - கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Post a Comment

Previous Post Next Post