Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு த.மு.எ. சங்கம் சார்பில் பாராட்டு



படவிளக்கம் : Writter: தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை ச.பொன்மலரை பாராட்டி கௌரவித்தார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  மற்றும் கலைஞர்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.லட்சுமிகாந்தன்.

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.15: தமிழக அரசின் கல்விச் சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை ஆசிரியை ச.பொன்மலருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைத் தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.நித்தியானந்தம் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியை ச.பொன்மலரை பாராட்டி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் கிளை பொருளாளர் ஏ.மரியடேவிட், செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஏ.சந்தானம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைத் தலைவர் எஸ்.வி.கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post