Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

உயர்கல்வித் துறை அமைச்சரின் இன்றைய முக்கிய செய்திக்குறிப்பு 


 செய்திக்குறிப்பு :

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் , அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் , அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள் , அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விழையும் மாணாக்கர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து , பதிவு செய்த அனைத்து மாணாக்கர்களுக்கும் சமவாய்ப்பு எண் ( Random Number ) 26.08.2020 அன்று வழங்கப்பட்டது . 



 அதனைத் தொடர்ந்து , கொரோனா நோய்த்தொற்று ( COVID - 19 ) சூழ்நிலையின் காரணமாக மாணாக்கர்களை நேரில் அழைக்காமல் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் வாயிலாக திறம் பெற்ற பேராசிரியர்கள் , வருவாய்த் துறை அலுவலர்கள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் , முன்னாள் இராணுவத்தினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்புடன் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது .

 பெரும்பான்மையான மாணாக்கர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது . இன்னும் சில மாணாக்கர்கள் சரியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால் , மாணாக்கர்களின் நலன் கருதி 17.09.2020 அன்று வெளியிடப்பட வேண்டிய தரவரிசைப்பட்டியல் 25.09.2020 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது . மேலும் , மாணாக்கர்கள் www.tneaonline.org STOOTM இணையதளத்தில் தங்களின் account- ல் login செய்து தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம் . மாணாக்கர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044-22351014 மற்றும் 044-22351015 என்ற தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் .


  - கே.பி. அன்பழகன் உயர்கல்வித் துறை அமைச்சர் , தலைமைச் செயலகம், சென்னை - 600 009 .

Post a Comment

Previous Post Next Post