Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

 

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி: இழப்பீடு வழங்குவது குறித்து நீதிபதிகள் அதிருப்தி

 

 

 

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, தற்கொலை சம்பவங்களை அரசே ஊக்குவிப்பது போல ஆகிவிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வில் தோல்வியடைந்த அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி கடந்த 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அதே ஆண்டு கிருத்திகா என்ற மாணவி மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான அமர்வு, நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் தற்கொலை கள் மற்றும் மரணங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும் எனவும் தேர்வு பயத்தை போக்கும் வகையில் உளவியல் ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் முறையிட்டார்.

அதில், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு முறையாக அமல்படுத்தி இருந்தால் தற்போது மேலும் 4 உயிர்கள் பறிபோய் இருக்காது என்றும் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் எனவே. தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றம்சாட்டினார். பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், '' நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல ஆகிவிடும்'' என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்துக்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post