Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
 Whatsapp Viral news : CPS இல் 70% எடுத்துக் கொள்ளலாம் - உண்மையா ? 

CPS இல் 70% எடுத்துக் கொள்ளலாம்... என ஒரு தகவல்...ஒரு அரசு கடிதத்துடன் வலைப்பதிவு வருகிறது...
அது உண்மையல்ல...

கடிதத்தில் உள்ள தகவல்... இறந்த, ஓய்வு பெற்ற ஊழியர்கள் CPS இறுதி தொகை பெறும் நடைமுறை சார்ந்தது...
எனவே 70% தொகை பெறுவது என்பது தவறு🙏🏻

தமிழக CPS சார்ந்து சில தகவல்கள்...

உண்மையில் இன்று வரை தமிழகத்தில் இருப்பது...
CPS திட்டமே இல்லை...
CPS மாதிரி....
அவ்வளவே...

1) மத்திய அரசு 01.01.2004 முதல் அமல் படுத்தியது..

2) மாநில அரசு முன் தேதி இட்டு 01.04.2003 முதல் செயல்படுத்துகிறது...

3) மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் CPS திட்டம் (NPS) ...
pfrda மூலம் கையாளப்படுகிறது...

4) தமிழக அரசு இன்று வரை pfrda வில் இணையவில்லை...

5) மத்திய அரசு மற்றும் pfrda விதி படி நான்கு ஆண்டு இடைவெளியில் 25% தொகை எடுக்கலாம்...

6) நமக்கு எந்த ஒரு வரையறுக்கப்பட்ட திட்டமும் இல்லை...

பணியில் இருக்கும் போது CPS பணத்தை எடுக்க வழி வகை இதுவரை இல்லை..

7) GPF மற்றும் gratuity...
வெவ்வேறு திட்டங்கள்..
ஒன்றை மற்றொன்று சாராதது...

மத்திய அரசு GPF & NPS இருவருக்குமே பணிக் கொடை வழங்குகிறது ( அதிகபட்சமாக 20 லட்சம்)

8) தமிழக அரசு...
GPF பணியாளர்களுக்கு மட்டுமே பணிக் கொடை...

CPS எனில் DCRG கிடையாது...
என வித்தியாசமான முடிவை எடுத்து உள்ளது..

ஏன் கிடையாது...?

அதற்கு அரசாணை இருக்கிறதா என்றால்...

அரசாணை எதுவும் இல்லை...

ஆனால் தமிழக அரசின் வாதம்..
கிடையாது என்றால் கிடையாது...😠

9) இதை விட கொடுமை....
பத்தாண்டுகளுக்கு முன்பு...
CPS பணி ஆசிரியர்களுக்கு..
ஓய்வு பெற்றால் பணி நீட்டிப்பு கிடையாது...

என வித்தியாசமான நடைமுறை இருந்து...
சட்ட போராட்டத்திற்கு பிறகே ...

திருமதி சபீதா இ.அ.ப அவர்களின் காலத்தில்...
CPS பணியாளர்களுக்கும் பணி நீட்டிப்பு உண்டு என ஆணை பெறப்பட்டது..

10) தற்போதைய நிலையில் ஒரே ஒரு +ve விஷயம்..
தமிழக அரசு இறந்த/ஓய்வு பெற்றவர்களுக்கு முழு தொகையையும்..

நான்கு பிரிவாக வழங்கிவிடுகிறது...
( 1.நாம் செலுத்தும் தொகை
2.அதற்கு வட்டி
3. அரசு செலுத்தும் தொகை
4. அதற்கு வட்டி)

11) மத்திய அரசு முழுத் தொகையையும் தராமல்..
40% , 60% என்ற அளவிலேயே தருகிறார்கள்...
மீதி தொகை ஏதாவதொரு திட்டத்தில் முதலீடு செய்து...

மிக மிக சொற்ப தொகையை மாதாமாதம் வழங்குவார்கள்...

( அந்த பணம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது)

* சந்தை என்பதை சூதாட்ட பங்கு சந்தை என நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல😛

நிறைவாக...
இறந்த/ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தமிழக அரசு எப்படி இவ்வளவு தாராளமாக CPS முழு பணத்தையும் வட்டியுடன் தருகிறது...🤔...

ரொம்ப எளிதாக புரிந்து கொள்ள....ஒரு உதாரணம்..

ஒரு லட்சம் பணியாற்றினால் ...

மாதமாதம் சந்தா தொகை கோடிக் கணக்கில் செலுத்துகிறோம்...

அதிலிருந்து 100 பேருக்கு இலட்சங்களில் தொகையை அளிப்பது கஷ்டமல்ல...

அந்த ஒரு லட்சம் பேருக்கும் திருப்பி அளிக்கும் நிலை வந்தால்...

நிச்சயமாக தடுமாறும்...
தடம்மாறும்...

நீண்ட நெடிய பதிவு...
ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்🤝🏻

TNPGTA மாநில சட்ட செயலாளர்..

க.செல்வக்குமார்🙏🏻

Post a Comment

Previous Post Next Post