Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
🔥 அரசு கேபிளில் Polimer News And Polimer Channel Delete செய்யும் வழிமுறை :

Please Forward To All Teachers And Do it Immediately

அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது பொதுமக்களிடம் வன்மத்தை ஏற்படுத்தும் Polimer News இனி நமது வீட்டில், நமது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில்  ஒளிபரப்பாமல் Channel ஐ Delete செய்வது எப்படி ?


இந்த உலகுக்கு பாடம்புகட்டுபவர்கள் ஆசிரியர்கள்.... (ஆசிரியர்களுக்கு  பாடம் புகட்ட நினைத்தால் என்ன நடக்கும் என்பதை நடத்திக்காட்ட வேண்டிய  நேரமிது....)

1.Click Menu Button on Your Government Cable Tv Remote


2. Go to programe --> Click programe Edit --> Password (000000) Six time Zero

4. Then Choose Polimer News Channel --> Click Yellow Button in your Remote (Yellow is Delete Button )

5.Click Exit Option in your Remote --> it will Ask Are you sure want to Save --> Click Yes Option

6. Click Exit in your Remote .. If ask password Again Press (000000)

______________________________________________________________

வணக்கம் பாலிமர் ( Polimer News ) :

தீ விபத்து
ஏற்படாதபோது
தீயணைப்பு வீரர்களுக்கும்...

போர்
இல்லாத காலத்தில்
இராணுவ வீரர்களுக்கும்...

ஊதியம் வழங்குவதை
கொச்சைப் படுத்த முடியுமா..?

அதுபோலத்தான் இந்த
அசாதாரண சூழ்நிலையில்
ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதும்.

இஸ்திரி தொழிலாளி, இளநி விற்பவர், வாழை இலை விற்பவர், ஹோட்டல் தொழிலாளி  இவர்களுடன் ஆசிரியர்களை ஒப்பிட்டு உங்களின் செய்தி வாசிப்பு மெத்தனத்தை கூட்டி காட்டிய உங்களின் அறிவுத்திறனை நினைத்து மெச்சாமல் இருக்க முடியவில்லை.

பாவம் இந்தக் கொரானாவால் தன் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களை இப்படி தவறான வழியில் வழிநடத்தும் உங்கள் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு என் வணக்கங்கள்.

பாமரர்களின் மனதில் ஆசிரியப் பணியின் மீது தொடர்ந்து கல் எரியச் செய்து கொண்டிருக்கும் உங்கள் பணி இன்னும் சிறக்கட்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே செய்தி வாசிக்கும் உங்களின் மாத சம்பளம் எவ்வளவு?

நீங்கள் எத்தனை பேர் உங்கள் வீட்டின் அருகில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியவர்கள். ஏசி அறையில் அமர்ந்து கொண்டு, குரலில் ஏற்ற இறக்கத்தொடு பேசி, மைக் பிடித்த மேதாவி சொல்லச் சொல்ல நீங்களே தயாரித்த வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து பேச வைத்த பாலிமர் சேனல் நண்பர்களின் பணி செம்மை அடைய வாழ்த்துக்கள்.

சமுதாயத்தில் பணம் படைத்த பணக்காரன் ஆசிரியர் தான் என்ற ஆகப் பெரிய கருத்துக் கணிப்பை நடத்தி, அதை சமுதாயத்தில் ஆணித்தரமாக நம்ப வைத்து அதைவைத்து பிழைப்பு நடத்தி, சம்பாதிக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள்.

ஒரு ஆசிரியரின் மாத வருமானம் ஒரு லட்சம் என்று புரளியை கிளப்பி விட்டு அதைத் திரும்ப திரும்ப பேச வைத்து பொய்யை, உண்மையாக பேச வைக்கும் உங்கள் ஊடக தர்மத்திற்கு என் மரியாதைகள்.

ஒரு ஆசிரியர் ஒரு லட்சம் சம்பளம் வாங்க வேண்டும் என்றால் அவர் குறைந்தது 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆசிரியராகப் பணி செய்திருக்க வேண்டும் மேலும் ஒய்வு பெறும் நிலையில் தான் அந்த நிலையை எட்டுவார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத உங்கள் வார்த்தை ஜாலங்களுக்கு என் வணக்கங்கள்.

அதிலும் குறிப்பாக 2009 க்குப்பின் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பல லட்சக்கணக்கான தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் போட்டியிட்டுஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தொலைதூர மாவட்டங்களில் நியமனம் மற்றும் அவர்களின் துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் அறிவுக்கு எட்டவில்லை என்பது எங்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.

இந்த ஆறு மாத காலம் என்னமோ பள்ளி திறந்திருந்தது, மாணவர்கள் எல்லாம் பள்ளிக்கு வந்திருந்தனர், ஆசிரியர் மட்டுமே பணிக்கு வராமல் இருந்தது போல் பேசி, உங்கள் டி.ஆர்.பி ரேட்டை அதிகப் படுத்த எங்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் உங்கள் அலைச்சலுக்கு என் மரியாதைகள்.

ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் இருவரையும் காலம் காலமாக ஒப்பிட்டு ஒப்பேத்திக் கொண்டிருக்கும் உங்கள் தார்மீக மனதிற்கு நான் சொல்வது என்னவென்றால், தனியார் பள்ளி ஆசிரியர் போராட வேண்டியது அரசுப்பள்ளி ஆசிரியர் கூட அல்ல, தான் பணிபுரியும் தனியார் பள்ளி தாளாளர் கூட என்று கூட தெரியாத உங்களைப் போன்ற மேதாவிகள் தான் அங்கு வேலை பார்க்கிறார்கள் என்று நினைக்கும் போது நான் படும் சந்தோஷத்திற்கு அளவில்லை.

ஏழை குடும்பத்தை சேர்ந்த தன் பள்ளி மாணவர்களுக்கு உணவுப் பொருட்களை எந்த தனியார் பள்ளியாவது வழங்கியுள்ளதா?,குறைந்த பட்சம் அவர்களின் குடும்ப சூழல் என்ன என்றாவது தெரியுமா? அரசுப் பள்ளி ஆசிரியரைக் கேளுங்கள்.... சொல்வார்கள். தனியார் பள்ளி, அரசுப் பள்ளி ஒப்பீடு என்பது அடிப்படையிலேயே தவறு. அதுபோல் தான் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை ஒப்பிட்டு பேசுவது.


அரசு ஊழியர்கள் என்பவர் வெறும் ஆசிரியர் மட்டுமல்ல, அரசு மட்டத்தில் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டத்தில் இருக்கும் அனைவரும் அரசு ஊழியர்கள் தான். அவர்களை எல்லாம் உங்களால் கேள்வி கேட்க முடியுமா? உண்மையில் முடங்கி இருப்பது கல்வித் துறை மட்டும் தானா? இதை உறுதியாக சொல்ல முடியுமா?


பாவம் பொது ஜனம், உங்களின் கருத்துக்களால் அவர்கள் குழம்பி, ஆசிரியர்களை குறை கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் குறை கூறுவது யாரை என்பது உங்கள் டி.ஆர். பி கையில் தான் உள்ளது.


ஒரு போக்குவரத்து தொழிலாளர்களும் தற்போது பணிக்கு செல்ல முடியவில்லை.இதுபோல் பல துறை உள்ளது ஆனால் ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு செல்லவில்லை என யார் கூறியது ? ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது உங்களைப்போல் அதிமேதாவிகளுக்கு தெரியாமல் போயிற்று.


இருப்பினும் பலவற்றை மறைத்து வெட்கமே இல்லாமல் இந்த வேலை பார்க்கும் உங்கள் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்...

Post a Comment

Previous Post Next Post