Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்

2nd Standard Term1 Tamil | Pesaathavai Pesinaal poonga |  பேசாதவை பேசினால் பூங்கா

இரண்டாம் வகுப்பு -  முதல் பருவம்
 தமிழ் பாடம் - தொகுதி-1  

பாடம் 3 :  பேசாதவை பேசினால்
 பூங்கா

ஐ பூங்கா வந்து விட்டேனே !

வருக வணக்கம் 

அட அழகாய் இருக்கே
எங்களைப் பறிக்காமல் பார்த்ததற்கு நன்றி

பிறரும் பார்த்து மகிழ வேண்டும் அல்லவா
கட்டளைகளை அறிவுரை கட்டளைகளையும் அறிவுரைகளையும் கேட்டு புரிந்து கொண்டு செயல்படுக

 பூக்களை பறிக்காதீர்

 மற்றவருக்கும் வாய்ப்பே அளிப்பீர்
 நான் ஊஞ்சலை விட்டு இறங்க போகிறேன். அவர்களும் ஆடட்டும்

நல்ல பண்பு. மகிழ்ச்சி
கீழே இறைக்காமல் சாப்பிடுகிறாய் பாராட்டுகள்

உணவு வீணாக்காதீர்
 உணவை வீணாக்கக் கூடாது. ஈக்கள் மொய்க்கும் அல்லவா !

குப்பையை குப்பைத்தொட்டியில் போடுவீர்
கீழே வீசினால் புல்தரை பாழாகும் குப்பைத் தொட்டியில் போடலாம்

 என்னை பயன்படுத்தியதற்கு நன்றி

 குடிநீர் கொட்டிக் கொண்டே இருக்கிறதே ? மூடி விட்டுச் செல்வோம் ..

 நீர் வீணாவதை தடுத்தாய்.  நன்றி

தண்ணீரை வீணாக்காதீர் 

வருகைக்கு நன்றி 

வியப்பாக இருக்கிறது. இங்கு எல்லாமே பேசுகிறதே..

மல்லி எழுந்திரு பூங்காவிற்கு செல்ல வேண்டுமே !

ஓ கண்டது கனவா ?

********************************

பயிற்சி :

படித்துப் பழகு

  1.  பூக்களைப் பறிக்காதீர்,
  2.  மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்,
  3.  உணவை வீணாக்காதீர்,
  4.  வருகைக்கு நன்றி ,
  5. தண்ணீரை வீணாக்காதீர் ,


எழுதி பழகுக

  •  பூங்கா 
  • கனவு 
  • பூக்கள் 
  • குடிநீர் 
  • ஊஞ்சல் 
  • குப்பைத்தொட்டி



 சரியா,  தவறா ?

  1. மல்லி சென்ற இடம் கடற்கரை (தவறு)
  2.  மல்லி கண்டது கனவு  ( சரி )
  3. மல்லி பூங்காவில் பூக்களை பறித்தாள் (தவறு)
  4.  மல்லி தண்ணீர் வீணாகாமல் தடுத்தாள் ( சரி )
  5.  மல்லிகை எழுப்பியவர் அப்பா (தவறு)



 பொருத்துக  : 

  1. பூக்கள்  -   பூக்களைப் பறிக்காதீர் 
  2. ஊஞ்சல் -  மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்
  3. தண்ணீர் குழாய் -  தண்ணீரை வீணாக்காதீர்
  4. குப்பைத்தொட்டி -  குப்பைத் தொட்டியில் போடுவீர்
  5. உணவு மேசை - உணவை வீணாக்காதீர்

Post a Comment

Previous Post Next Post