Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
ஆசிரியர்களுக்கு எதிராக மக்களை ஏவி விடும் பாலிமர் - செய்திக்குழுவை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

 உலகமே போற்றும் மகத்தான பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி பூசி , கொரோனா காலத்தில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பதற்கு , ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் தான் காரணம் என்ற நச்சுக் கருத்துக்களைக் கூறி , மக்களை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக ஏவி விடும் நாசகார வேலையில் இறங்கி இருக்கும் பாலிமர் செய்திப் பிரிவை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் .


 பார் போற்றும் பண்பாளர்களையும் , நாட்டுக்கு உழைக்கும் உத்தமத் தலைவர்களையும் , நல்ல அரசியல் தலைவர்களையும் , நாட்டை நிர்வகிக்கும் உத்தம புருஷர்களையும் , நல்ல அறிஞர்களையும் , மேதைகளையும் , விஞ்ஞானிகளையும் , நாட்டைக் காக்கும் நல் வீரர்களையும் உருவாக்கும் அரும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள் . அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் என்பதை நாடே அறியும் . ஏழை எளிய மக்களின் குழந்தைகளின் கல்விக் கண்களை திறந்து வைத்து அவர்களின் செம்மையான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக என்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் . ஆசிரியர்களின் ஊதியம் என்பது , 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய , மாநில அரசுகள் ஊதியக் குழுக்களை ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைத்து , ஆசிரியர்களின் பணிப் பண்புகளை நன்கு அலசி ஆராய்ந்து , பல விவாதங்கள் நடத்தி , பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் வழங்கப்படுவது தான் ஆசிரியர்களின் ஊதியம் .

* ஆசிரியர்களாகவே தங்களுடைய ஊதியத்தை நினைத்தபொழுதெல்லாம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று உயர்த்திக்கொள்வது இல்லை . சுதந்திர இந்தியாவில் இன்று வரை மொத்தம் 7 முறைதான் ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது . நாட்டின் செல்வாதாரங்களை எல்லாம் சுரண்டி , கொள்ளை அடித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள் அல்லர் .

 * வங்கிகளில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தில் கோடி கோடியாக கடன் பெற்று , திருப்பிக் கொடுக்காமல் , அரசை ஏமாற்றி வெளி நாடுகளுக்குச் சென்று ராஜபோக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்வர்கள் ஆசிரியர்கள் அல்லர் . இந்திய மக்களிடமிருந்து , தொழிலாளி மக்களிடமிருந்து அவர்களது உழைப்பில் இருந்து சுரண்டப்பட்ட பணத்தில் கோடி கோடியாக வெளிநாட்டு வங்கிகளில் சேமித்து வைத்து , அரசை ஏமாற்றித் திரியும் எத்தர்களின் கூட்டம் அல்ல ஆசிரியர்கள் சமுதாயம் . தங்களின் வருமானத்தைக் குறைத்துக் காட்ட , பொய் கணக்குகளை எழுதி , அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை ஏப்பம் விடும் கூட்டம் அல்ல ஆசிரியர் கூட்டம் .

 * இவர்களிடம் குவியல் , குவியலாக குவிந்திருக்கும் மக்களின் பணத்தை எடுத்து அரசின் வருவாயைப் பெருக்கி , அதன் மூலம் , கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க ஆக்கப்பூர்வமான வழிவகைகளை சொல்ல வக்கற்ற பாலிமர் செய்திப் பிரிவு , கொரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்லாமலேயே ஆசிரியர்கள் ஊதியம் பெறுவது நியாயமா ? என்று மக்களை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பிவிட எத்தனிக்கும் செயல் எவ்வளவு அறிவிளித்தனமானது , கோமாளித்தனமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் .

* இயற்கைச் சீற்றங்கள் இந்தியாவின் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் , அதன் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் துயர் துடைக்க தமிழகத்து ஆசிரியர் சமுதாயம் என்றும் தயங்கியதில்லை ; தனது உதவிக்கரங்களை நேசக் கரங்களை நீட்டி அரவணைத்து வந்திருக்கிறது என்ற வரலாறு பாலிமர் நண்பர்களுக்கு தெரிந்திருக்குமா ? இப்பொழுதுகூட கொரோனா - நிவாரண நிதிக்கு தமிழகத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ரூ .100 கோடிக்கு மேல் வழங்கியுள்ளனர் என்பதை பாலிமர் நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம் .

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க வழிவகைகளைக் காணவேண்டுமே தவிர மற்றவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க சதி ஆலோசனைகளை வழங்கக் கூடாது . ஆகவே தனது அளப்பறிய தியாகங்கள் மூலம் , இமய மலை போல் உயர்ந்து நிற்கும் ஆசிரியர் சமுதாயாத்தைப் பார்த்து யார் குரைத்தாலும் , ஊளையிட்டாலும் , அது இமயமலையை ஒருபோதும் சீர்குலைக்க பயன்படாது என்பதை பாலிமர் செய்திப் பிரிவு நண்பர்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறோம் . ஆகவே இதுபோன்ற விஷமத்தனமான வேலையையும் , சிண்டு முடியும் வேலையையும் ; திகிடுதத்தம் செய்யும் வேலையையும் மேற்கொண்டு தொடரவேண்டாம் என்று பாலிமர் செய்திக் குழுவை கேட்டுக்கொள்கிறோம் .

இவண் ,
 அ.மாயவன்
 நிறுவனத் தலைவர் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் . 

Post a Comment

Previous Post Next Post