Tamil Nadu New Text Books 2021

Title of the document நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
வணக்கம். இன்று 13.8.2020 காலை CEO அவர்கள் தலைமையில் நடைபெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் வழங்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்:

1)1-5 வரையான தொடக்கநிலை மாணவர்களுக்கு  (நர்சரிப்பள்ளிகள் உட்பட )கடைசி வேலை நாள் 13.03.2020.

 நடுநிலைப்பள்ளி (6 7 8) மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் 16.03.2020.

2) EMIS இல் School profile,
Teachers profile,
Students profile உடனடியாக முடித்தல் வேண்டும்.

3) TC வேண்டுகின்ற பெற்றோர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொண்டு TC ஐ EMISல் online மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து தரவேண்டும்.

பெற்றோர்களை அலைக்கழிக்கக் கூடாது.TC கேட்டு விண்ணப்பித்த அன்றே வழங்கிவிட வேண்டும்.

TC பச்சைவண்ண Bond பேப்பரின் A4 Size தாளில் பிரிண்ட் எடுத்துத்தர வேண்டும்.

4) ஜாதி எனக் குறிப்பிட்டுள்ள கலத்திற்கு எதிராக Refer community certificate என மட்டுமே குறிப்பிட  வேண்டும்.

5)நாளை 14.8.2020 முதல் சனிக்கிழமைக்குள்ளாக மாணவர்களுக்கான தேர்ச்சிப் பணிகளை முடித்தல் வேண்டும்.

வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புதல் பெற்று TC வழங்கும் பணிகளை முடித்தல் வேண்டும்.

நாளை 14.8.2020 முதல் அனைத்து ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர்கள் இப்பணிக்கு வரவழைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

TC வழங்கும் முன் வகுப்பு ஆசிரியரும் அதன்பின் தலைமை ஆசிரியரும் அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்னரே TC வழங்க வேண்டும்.

6) பள்ளிகளில் பயின்ற 5,8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி அளித்து   Common pool க்கு 14.08.2020 க்குள் உடனடியாக மாற்றம் செய்தல் வேண்டும்.

இடைப்பட்ட வகுப்புகளில் TC கேட்கும் மாணவர்களை COMMON POOL க்கு அனுப்பிய பின் TC GENERATE செய்து வழங்க வேண்டும்.

TC பள்ளி நகலுக்கு - 1
மாணவர்களுக்கு - 1 என நல்ல தரமான பிரிண்ட் எடுத்து வழங்கவும்..

7) 15.8.2020 சுதந்திர தினத்தன்று தமிழக அரசு தெரிவித்துள்ள அறிவுரைகளைப் பின்பற்றி கொண்டாடுதல் வேண்டும்.

மாணவர்களைக் கட்டாயப்படுத்தி
பள்ளி சுதந்திர தின விழாவிற்கு வரவழைக்கக் கூடாது.

சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் வேண்டும்.

அனைவரும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும். Sanitizer பயன்படுத்த வேண்டும்.

8) 17.08.2020 முதல்  LKG, I STD, VI STD வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

அதற்கு முன் பள்ளியை சுத்தமாக வைத்திருத்தல்,
கழிவறைகளை சுத்தமாகப் பராமரித்தல்,
குடிதண்ணீர் வசதி செய்தல்,
Sanitizer வைத்திருத்தல் போன்ற ஆயத்தப் பணிகளை செய்ய வேண்டும்.

9) அங்கன்வாடியில் பயின்று முடித்தவர்களையும் 5+ எனக் கண்டறியப்பட்ட மாணவர்களையும் தவறாது முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும்.
பிறந்த தேதிக்கான சான்றிதழ் பெற்று முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும்.

சான்றிதழ் பின்னர் தருவதாக பெற்றோர் கூறினாலும், பெற்றோர் உறுதி மொழிப்படிவம் பெற்றுக் கொண்டு சேர்க்கை வழங்கலாம்.

நிறைய மாணவர்கள் சேர வாய்ப்பிருக்கும் பள்ளிகளில் காலை ,மாலை மறுநாள் காலை ,மாலை என கொஞ்சம் கொஞ்சமாக மாணவர் சேர்க்கை நடத்தலாம்.
(தெருவாரியாக/ வார்டு வாரியாக/குடியிருப்பு வாரியாக பிரித்தும் உள்ளூர் சூழ்நிலையை அனுசரித்தும் சேர்க்கையை 17.8 20 முதல் தொடர்ந்து நடத்திடலாம் )

மாணவர் சேர்க்கைக்கு அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாது பின்பற்றுதல் வேண்டும்.

மாணவர் சேர்க்கை தொடர்பாக ஊருக்குள் சென்று சமூக இடைவெளியைப் பின்பற்றி பெற்றோர்களை ஆசிரியர்கள் சந்திக்கலாம்.

10) U DISE Validation ஐ 15.08.2020 க்குள் முடித்தல் வேண்டும்.

11) நலத்திட்டப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும்போது உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்று வழங்குதல் வேண்டும்.

12) ஆசிரியர்கள் online மூலம் பாடம் நடத்தலாம்.

13)அலைபேசி உதவியுடன் மாணவர்களை online வகுப்புகளைக் கவனிக்க ஊக்கப்படுத்தலாம்.

14) e_learn.tnschools.gov.in என்ற வலைத்தளத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் வீடியோவாக பாடங்கள் தயார் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தலாம்.

மேற்கண்ட அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி மாணவர் சேர்க்கை, TC வழங்குதல் பணிகளை சிறப்பாக முடித்திட  அனைத்து பள்ளித்  தலைமை ஆசிரியர்களும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post